கோபத்தில் ரிமோட் களையும் வாட்டர் பாட்டுகளையும் தூக்கி வீசி உடைத்து விட்டேன் எனக்கூறி பாண்டிங் தற்போது அதிர்ச்சி அளித்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணி ஐபிஎல் போட்டியில் விளையாடியது அந்த போட்டியில் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தால் தான் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் ஆடியது. அந்த நேரத்தில் ரவுமன் போவெல் 3 பந்துகளில் 3 சிக்சர்களை அடித்து விட்டார். அப்போது மூன்றாவது வீசிய பந்து நோபால். ஆனால் அங்கிருக்கும் நடுவர்கள் அதை நோபால் என்று அறிவிக்கவில்லை. பார்க்கும் நமக்கு நோபால் போன்று தெரிகிறது ஆனால் நடுவர்களின் அதை நோபால் என வழங்கவில்லை என்று அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் பயிற்சியாளர் ஒருவரான பிரவீன் அம்ரே நடுவரிடம் வாதிட்டனர்.
மனைவியுடன் பிக்னிக்கில் ரொமான்ஸ் செய்த கே ஜி எஃப் நடிகர் யாஷ் | இணையதளத்தில் பகிர்ந்த மனைவி

ஆனால் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பதால் அந்தப் பந்துக்கு நோபால் வழங்கவில்லை. பின்னர் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றது. அதன் பின்னர் பண்ட் மற்றும் பிரவீன் அம்ரே-வுக்கு அபராதங்களை விதித்து தீர்ப்பு வழங்கியது பிசிசிஐ. இதனை கண்டு ரிக்கி பாண்டிங் அவர்கள் மிகவும் கடுப்பில் இருந்துள்ளார். அவரிடம் இது பற்றி விசாரிக்கும்போது அவர் கூறியதாவது :- “நான் மிகவும் கடுப்பில் இருந்தேன் வீட்டிலிருந்த ரிமோட்டுகளை எல்லாம் உடைத்து விட்டேன், வாட்டர் பாட்டில்களை சுவற்றில் தூக்கி அடித்திருக்கிறேன். அவ்வளவு ஆத்திரமாக இருந்தது ஒரு பயிற்சியாளராக விளையாட்டுக் களத்தில் இதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருந்திருக்க முடியாது, ஆனால் விளையாட்டுக் களத்தில் இல்லாமல் வெளியே இருப்பது இன்னும் கடுப்பை எனக்குள் உண்டாக்கியது” என மிகவும் வெறுப்பில் பேசியுள்ளார்.
