சமீபத்தில் விடை பெற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிகழ்ச்சியின் போது ராம்நாத் கோவிந்தை கண்டுகொள்ளாமல் கேமராவை பார்த்தே நின்றது விழாவில் சில நேரம் சலசலப்பாக இருந்தது. இவர் கண்டு கொள்ளாமல் நின்றதால் அடுத்தடுத்த நபர்களுக்கு அவர் வணக்கம் சொல்ல சென்றார். இந்த நிகழ்வை கண்ட பொண்வானன் அவர்கள் தற்போது சரமாரியாக மோடியை விலாசி உள்ளார்.
இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தன் பதவி காலம் கடந்த ஜூலை 24ஆம் தேதி முடிவடைந்ததால் புதிய குடியரசு தலைவராக திரௌபதி முர்முவை தேர்ந்தெடுத்தனர். மேலும் பழைய குடியரசுத் தலைவரான ராம்நாத் சென்ட் ஆப் விழாவில் கலந்து கொண்டார் இதில் பல முக்கிய நிர்வாகிகள் எம்பிக்கள் என அனைவரும் பங்கேற்பார்கள்.

இதில் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், பலரும் எழுந்து நிற்க ராம்நாத் கோவிந்த் ஒவ்வொருவரும் முன்பாக கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறியபடி வந்தார். அப்போது முன்வரிசையில் அருகருகே நின்று கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியை அவர் கையெடுத்து கும்பிட்டு செல்ல நினைத்தார். அப்போது இவரை கண்டு கொள்ளாமல் கேமரா பார்த்துக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியை அனைவரும் சற்று வியப்புடன் பார்த்தனர். அதனால் எவ்வளவு நேரம் அவர் முன்பு கைகட்டி கை கூப்பி நின்றும் அவர் தம்மை கண்டுகொள்ளாமல் இருப்பதால் வேறு ஒருவரிடம் நகர்ந்தார்.
இதைப் பற்றி பேசிய நடிகர் பொன்வண்ணன் அவர்கள் :- “போர்ட் தொழிற்சாலை க்ளோஸ் பண்ணிட்டாங்க அதை பார்த்ததிலிருந்து எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒரு கார் அதுவும் அது கடைசி கார் அவங்க தயாரித்த கார அவ்வளவு சென்டிமென்ட் அனுப்பி வைக்கிறாங்க. அந்த கார்க்கு கூட சிலர் அனுதாபம் செய்றாங்க. உயிர் இல்லாத அந்த காருக்கும் அப்படி செய்யுறோம் ஆனா ஜனாதிபதி விடை பெறுவதற்காக நிற்கும் போது போட்டோவுக்கு போசு கொடுக்கிறார்கள், எங்கே இருக்கிறது மனிதாபிமானம் ? காருக்கு நம் நாட்டில் அவ்வளவு சென்டிமென்ட் இருக்கும்போது ஒரு குடியரசுத் தலைவருக்கு அதை நாம் செய்ய வேண்டாமா ? எனக் கூறியிருக்கிறார்” இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
