இங்கிலாந்தில் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனக் பசு மாட்டிற்கு பூஜை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமர் யார் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வருகிறது. இதற்காக புதிய பிரதமர் பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.ரிஷி சுனக் பங்கு பெற்றார். அவர் அடுத்தடுத்த சுற்றிகளில் வெற்றி பெற்று இறுதி வேட்பாளராக தற்போது களத்தில் உள்ளார். இவரை எதிர்த்து 46 வயதான லிஸ் டிரஸ் என்பவரும் களத்தில் உள்ளார்.
இப்போது எந்த இருவருள் ஒருவர் தான் அடுத்த இங்கிலாந்து பிரதமராக வரப் போகிறார்கள் என்னும் நிலையில் தற்போது பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பிரதமர் தேர்வானது கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இரண்டு லட்ச உறுப்பினர்கள் தான் பிரிட்டனில் அடுத்த பிரதமர் யார் என்று தேர்வு செய்ய உள்ளனர். தற்போது இந்த வாக்கெடுப்புகள் தபால் முறையில் நடந்து வருகிறது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிய வரும்.

தற்போது இந்த தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சொன்ன பசு மாட்டிற்கு பூஜை செய்த வீடியோ படு வைரலாகி வருகிறது. அவரும் அவரது மனைவி அக்ஷிதாவும் லண்டனில் உள்ள ஒரு பசுமாட்டுக்கு கோ பூஜை செய்து வந்தனர். கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற இந்த கோ பூஜை நிகழ்வு தொடர்பான வீடியோ காட்சிகள் அங்கு இருப்பவரால் போனில் வீடியோ எடுக்கப்பட்து பகிரப்பட்டது. லண்டனில் உள்ள ஒரு கோவிலில் இந்த கோ பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூதையின் போது பசு மாட்டிற்கு ஆரத்தி காண்பித்து குங்குமம் வைத்து ரிஷி சுனக்கும் அவரது மனைவியும் வழிபட்டனர்.
Who? Rishi Sunak (PM candidate)
— Sumit Arora (@LawgicallyLegal) August 25, 2022
Where ? London, England
What ? Performing Cow worship
That’s our rich cultural heritage we must be proud about.
तत् त्वम असि = Tat twam asi #Hinduism #Rishisunak #India #London #Hindutva pic.twitter.com/aaKdz9UM5R
