தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முக்கியமான ஒரு கதாநாயகியாக வலம் வருபவர் தான் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் கிட்டவில்லை. அதனால் தெலுகு தெரியுலகில் இவர் கொடிகட்டிப் பறந்தார். அலவைகுண்டபுறம், அரவிந்த சமிதா, Most Eligible Bachelor போன்ற படங்களில் நடித்து பெரிய நடிகையாக மாறினார்.
அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார். சமீபத்தில் இவருக்கு அமைந்த படங்கள் ராதேஷ்யம், பீஸ்ட், ஆச்சர்யா போன்ற படங்கள் தோல்வி அடைந்தது. அந்த மூன்று படங்களிலும் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி நடித்தார். கடைசி மூன்று மாதங்களில் அடுத்தடுத்து வெளியான இந்த மூன்று படங்களும் படு தோல்விகளை சந்தித்தது. இதனால் இவருக்கு மார்க்கெட் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவரின் கதையை தேர்வு சரியாக இல்லையா அல்லது அவரின் ராசி யா என்று தெரியவில்லை மூன்று மாதங்களில் மூன்று பெரிய பிளாப் படங்களை கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்ததிலிருந்து கதை கேட்பதிலும், கதாநாயகர்களை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்துகிறாராம் பூஜா. இவரின் நடிப்பில் தற்போது ஒரு மகேஷ்பாபு படமும் அதன் பிறகு பவன் கல்யாண் படமும் அடுத்தடுத்த மாதங்களில் வெளிவர இருக்கிறது. அந்த படங்கள் எப்படி விமர்சனங்களை பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
