ராதேஷ்யாம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததன் காரணமாக பிரபாஸ் ரசிகர் ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதேஷ்யாம் திரைப்படம் உலகமெங்கும் மார்ச்11ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியானதிலிருந்து வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனாலும் ராதேஷ்யாம் விமர்சன ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. பார்க்கும் அனைவரும் பிரபாஸிற்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று கலவையான விமர்சனங்களை தான் தருகின்றன. இந்தப் படத்தின் டோட்டல் பட்ஜெட் 400 கோடி ஆகும்.
இதனிடையில் முத்யால ரவிதேஜா என்ற பிரபாஸின் தீவிரமான ரசிகர் ஒருவர் ராதேஷ்யாம் திரைப்படத்தை முதல் நாள் பார்த்து இருக்கிறார். முதல் நாளிலிருந்து படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கண்ட அவர் மிகவும் மனம் நொந்து பெற்றோர்கள் மற்றும் நண்பர்களிடம் கவலைபட்டுள்ளர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான முத்யால ரவிதேஜா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் துக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரின் மறைவு செய்தியை அறிந்த அவரது நண்பர்கள் மட்டும் பிரபாஸ் ரசிகர்கள் வருத்தத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.