சொத்துக்களை பிரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக நடிகர் பிரபு மேல் வழக்கு தொடர்ந்திருக்கும் அவரது சகோதரிகள்
மறைந்த நடிகர் திரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சம்பதித்த சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நடிகர் பிரபு மற்றும் ராம் குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் பிரித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நடிகர் பிரபு ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சாந்தி மற்றும் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு தெரியாமல் சில சொத்துகளை நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் விற்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.
தலயை வாழ்த்திய தளபதி | என்ன கூறியிருக்கிறார் தெரியுமா

சில சொத்துக்களை எங்களுக்கு தெரியாமல் அவர்களின் மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பிரபு ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டனர் என்றும் அவர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் இதில் தலையிட்டு தங்களுக்கு உரிமையான சொத்துக்களை பெற்று தர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
