கார்த்தியின் சகுனி படம் மற்றும் சூர்யாவின் மாஸ் படத்தில் நடித்தன் மூலம் பிரபலமான நடிகை தான் பிரணிதா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அப்போதிலிருந்து சினிமா துறையை விட்டு ஒதுங்கி இருந்தார் ப்ரணிதா. கணவரின் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து உள்ளார். பின்னர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்த இவர் இது குறித்தான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தற்போது இவர் பீமன் அமாவாசை அதாவது ஆடி அமாவாசை முன்னிட்டு தனது கணவருக்கு பாத பூஜை செய்தார். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்தார். பல ஊர்களில் இந்த வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வழக்கத்தின் படி அவர் செய்த பூஜை குறித்து சில நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் ஒரு சிலரோ இன்னும் பழைய பழக்க வழக்கங்களை கடைபிடித்து வருகிறீர்களே என்று திட்டியும் வருகின்றனர். இது போன்ற பூஜைகள் தேவையற்றது மனிதருக்கு பூஜை செய்வதை தேவையில்லாத விஷயம் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
