நடிகரும், இயக்குனரும் மற்றும் ராதிகாவின் முன்னாள் கணவருமான பிரதாப் போத்தன் காலமானார்

பிரபல நடிகரும் மற்றும் இயக்குனருமான பிரதாப் போத்தன் வயது மூப்பு காரணமாக இன்று அவரது வீட்டில் காலமானார்.

பிரதாப் போத்தனக்கு 70 வயது ஆகிறது. சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் அவரது வீட்டிலேயே தூக்கத்தில் இருந்தபோது உயிர் பிரிந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரதாப் போத்தன் என்னும் பெயரை கேட்டாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நினைவு வருவது என் இனிய பொன் நிலாவே என்ற பாடல் தான். அந்த பாடல் மூடு பனி என்னும் படத்தில் இடம்பெற்றிருக்கும். அந்த திரைப்படத்தில் ஒரு சைக்கோ தனமான நடிப்பு நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் மேலும் அழியாத கோளங்கள், ஆயிரத்தில் ஒருவன், அலெக்ஸ் பாண்டியன், பூஜை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை காட்டியவர். இவர் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட 12 படங்களை தனது இயக்கத்தில் வைத்திருக்கிறார். மேலும் ஒரு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஹீரோ வில்லன் காமெடி என பன்முக திறமை கொண்ட ஒரு நடிகர் இவர்.

1985 ஆம் ஆண்டு சிறந்த அறிமுகம் இயக்குனருக்கான தேசிய விருது இவரின் படத்திற்கு கிடைத்தது. மேலும் கேரள மாநில அரசின் விருது, பிலிம் பேர், சைமா போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். பிரதாப் போத்தனின் மறைவு திரை உலகினரை தற்போது கவலை குள்ளாகியுள்ளது. பலரும் அவருக்கு தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அல்லது நாளை காலை அவர் உடல் இறுதி சடங்கு நடக்கும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

பிரதாப் போத்தன் நடிகை ராதிகா அவர்களின் முன்னாள் கணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து கர்ப்பம் ஆனா பெண் ? | உண்மையில் வெங்கடேஷ் பட் சொல்லவந்தது என்ன ? ஒரு அலசல்

கடந்த ஒரு சில தினங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை வைத்து பல மீம்ஸ்கள் மற்றும்

“அம்பேத்கருக்கு நிகரானவர் மோடி” – சர்ச்சை பேச்சால் நெட்டிசன்களிடம் திட்டு வாங்கும் இளையராஜா

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருக்கு நிகரானவர் என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசியது தற்போது பெரும்

இப்படி நடந்திருக்க கூடாது …. | இனி இவர் ஐபிஎல் போட்டியில் ஆடுவார ?? மும்பை ரசிகர்கள் சோகம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்தான் சூர்யகுமார் யாதவ்.