116.27 கோடி ரூ மதிப்பீட்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தோடு இணைந்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரியம் சார்பாக கட்டப்பட்டிருக்கும் குடிருப்புக்களை மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் திறந்துவைத்தார். பயனாளர்களுக்கு வீட்டிற்கான ஒதுக்கீடு ஆணைகளை மாண்புமிகு பிரதமர் அவர்கள் வழங்கினார். அப்போது பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் கையை பிடித்து இழுத்து இருவரும் சேர்ந்துவழங்கலாம் என மரியாதையை நிமித்தமாக பிரதமர் செய்த செயல் அனைவராலும் பாராட்டி வருகிறது.



