இந்தியத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் பிரியங்கா சோப்ரா. இவர் உலகம் முழுவதும் பிரபலமான பிக் பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு புகழ்வாய்ந்த பிரபல நடிகையான மாறினார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு தனது பெரும்பாலான நேரங்களை கணவருடன் வெளிநாட்டிலேயே செலவழித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இவர்கள் இருவருக்கும் பத்து ஆண்டுகள் வித்தியாசம் இருக்கும் என்று சொல்லலாம். அதாவது பிரியங்கா சோப்ராவை விட கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் சிறியவராக இருப்பவர் தான் நிக் ஜோனஸ்.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுகொள்ள இருக்கும் நயன்தாரா | இந்த முடிவுக்கு காரணம் என்ன
இந்நிலையில் நேற்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகை அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கணவர் மற்றும் நண்பர்களுடன் பிரியங்கா சோப்ரா வும் கோலாகலமாக கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோக்களை பதிவிட்டு இருந்த பிரியங்கா சோப்ரா :-“உலகம் மிகவும் பயமுறுத்தும் ஒரு நேரத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியை காண முடியும். அது ஒரு வரம். அனைவருக்கும் இனிய ஹோலி. ஹோலி பண்டிகையை விளையாடிய எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.” என்று பதிவிட்டு இருந்தார்.
மேலும் அவரது கணவர் நிக் ஜோனாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி மற்றும் நண்பர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மனைவியுடன் லிப் கிஸ் அடிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. ரசிகர்கள் அதை வைராலாகி வருகின்றனர்.
Happy Holi! pic.twitter.com/kK5tpWlcr0
— Nick Jonas (@nickjonas) March 18, 2022