சமூக வலைதளத்தில் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு கல்யாணத்திற்கு பின் எப்படி இதை எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள் என கேட்டதற்கு ஒரு பதிலை அளித்தார்.
விஜய் டிவி தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார் தொகுப்பாளினி பிரியங்கா. இந்த நிகழ்ச்சியில் அவர் முதலில் ஒரு டெக்னீசியன் ஆக பணியாற்றி பிரவீன் என்பவரை பிரியங்கா 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்குப் பின்னர் அவர்கள் எடுத்த புகைப்படம் வீடியோக்கள் என எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வந்தார்.

ஆனால் தற்போது பிக்பாஸ் சென்று வந்ததிலிருந்து பிரியங்கா தனது கணவரை பற்றி ஒரு பதிவை கூட இதுவரைபோடவில்லைஅண்மையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குட பிரீஸ் டாஸ்கின் போதும் அவர் கணவர் வரவில்லை. அதனால் இவரது கணவருக்கும் இவருக்கும் ஏதேனும் பிரச்சனையா என மக்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர்.
இது குறித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பிரியங்காவிடம் கேள்விகளை எழுப்புகின்றனர். இந்நிலையில் ஓர் ரசிகர் எப்படி திருமணத்திற்கு பின் எல்லாவற்றையும் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்க்கு பிரியங்கா அவர்கள் “உங்களை நன்றாக புரிந்துகொள்ளும் கணவர் இருந்தால், அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால் அனைத்தும் சாத்தியமாகும்” என நெத்தியடி பதிலை அளித்திருக்கிறார். இந்த பதிலின் மூலம் அவர்கள் இருவருக்கும் விவாகரத்து எனப்படும் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார்.
