IPL | மோடி ஸ்டேடியமில் பணம் புகுந்து விளையாடியது | கார் வென்ற தமிழக வீரர் தினேஷ் | மேலும் மற்ற வீரர்கள் பெற்ற பரிசுகள் என்னென்ன ?

நேற்றைய ஐபிஎல் தொடர் கோலாகலமாக குஜராத்தில் இருக்கும் நரேந்திர மோடி அரங்கில் நடந்தது. இதில் குஜராத் அணி தனது முதல் கோப்பையை வென்று அசத்தி இருக்கிறது. அதனால் பலரும் இந்த அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 130 ரன்கள் மட்டுமே 20 ஓவரில் அடிக்க முடிந்தது. அந்த 130 ரன்களை 18 ஒவேர்களிலேயே அடித்து வெற்றியை தன் பக்கம் திருப்பியது குஜராத் அணி.

ஆட்டம் முடிந்த பிறகு கோப்பையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சில பரிசுகளையும் சில வீரர்களுக்கு கொடுப்பார்கள் அதை யார் யார் வாங்கி இருக்கிறார் என்று கீழ் வருமாறு :-

முதலில் சஞ்சு சாம்சன் ரன்னர் அப் கோப்பையை பெற்றார் அந்த கோப்பையோடு 12.5 கோடியையும் பெற்றார்.

கொல்கத்தா அணிக்கு எதிராக ரிங்கு சிங்கின் அதிரடியான கேட்சை பிடித்து இந்த ஆண்டுக்கான சிறந்த கேட்ஸ் என்ற விருதையும் மற்றும் 10 லட்சம் பணத்தையும் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஏவின் லூயிஸ் பெற்றார்.

அதன் பிறகு இந்த சீசனில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக ஊதா நிற தொப்பியுடன் 10 லட்சம் காசோலையை பெற்றார் சகல்.

இந்த சீசனுக்கான அதி வேகமாகப் பந்து வீச்சினை வீசியதற்காக லாகி ஃபர்குசொன் 10 லட்சம் பெற்றார்.

ஆட்டத்தை நியாயமாக விளையாடியதற்கான விருதை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத்தில் அணி வென்றது.

ராஜஸ்தான் அணியை சேர்ந்த தினேஷ் கார்த்திக் சூப்பர் ஸ்டிரைக்கர் என்ற விருதை பெற்றார் அதனுடன் சேர்ந்து அந்த அரங்கில் எல்லாம் போட்டியின் போதும் ஸ்டேடியமில் நிறுத்தப்பட்டிருந்த டாடா பன்ச் காரையும் பரிசாக பெற்று இருக்கிறார்.

வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை உம்ரான் மாலிக் பெற்றார்.

இதனோடு சேர்ந்து சுமார் பல விருதுகளை ஜோஸ் பட்லர் ஒரு ஆள் மட்டுமே வென்றிருக்கிறார். அவர் வென்ற பரிசுகள் என்னவென்றால் மிகவும் மதிப்புமிக்க வீரர், இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தற்காக ஆரஞ்சு தொப்பி, இந்த சீசனில் அதிக போர் அடித்த வீரர், இந்த சீசனுக்கான பெஸ்ட் பவர் பிளேயர், இந்த சீசனில் கேம் changer ஆக இருந்தது, அதிக சிக்ஸர்கள் அடித்து விருது…. என அவர் ஒருவர் மட்டும் 60 லட்சத்தை பெற்றார்.

கடைசியாக கோப்பையை வென்ற குஜராத் அணிக்கு 20 கோடியை பரிசாக அளித்தனர்.

Spread the love

Related Posts

ஒரு சாப்பாடு வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற விளம்பரத்தை நம்பி 90,000-த்தை இழந்த பெண்மணி

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற விளம்பரத்தை பார்த்து உணவு ஆர்டர் செய்த டெல்லியை சேர்ந்த

RCB அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவித்தது பெங்களூரு அணி

2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் இந்த மாதம் 26ஆம் தேதி கோலாகலமாக மும்பையில் தொடங்க உள்ளது.

என் புருஷன் எதையுமே கண்டுக்கமாட்டான்… நித்தி சிஷ்யை நடிகை ரஞ்சிதா ஆதங்கம்

நித்தியானந்தாவுடன் கிசுகிசுக்கப்படாமல் நடிகை ரஞ்சிதா இருந்ததே இல்லை குறிப்பாக கைலாச அதிபர் நித்யானந்தாவின் பெயர் எப்போதெல்லாம்

Latest News

Big Stories