PTR கார் மீது செருப்பு அடித்ததை வைத்து அரசியல் செய்யலாம் என அண்ணாமலை போனில் பேசியதாக ஒரு வாய்ஸ் வெளியாகி பரபரப்பாகியிருக்கிறது

பி டி ஆர் வாகனம் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இதை வைத்து அரசியல் செய்யலாம் என அண்ணாமலை பேசியதாக ஒரு ஆடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு அந்த சண்டையில் மதுரையை சேர்ந்த லக்ஷ்மணன் என்பவர் உயிரிழந்தார். அவருடைய உடலுக்கு உடலுக்கு அமைச்சர் பி டி ஆர் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது பாஜக வினர்க்கும் அமைச்சர் பி டி ஆற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அமைச்சர் மீது பாஜகவினர் செருப்பைக் கொண்டு எறிந்தனர். இதற்காக மதுரை மாநகர் தலைவராக பாஜகவில் இருந்து வரும் டாக்டர் சரவணன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

“அவர் ஒருமையில பேசல உரிமையில தான் பேசினார், அவரு எனக்கு அப்பா மாதிரி” – அமைச்சர் கே.என் நேரு சர்ச்சை குறித்து விளக்கம் தந்திருக்கும் மேயர் பிரியா

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போதைய மதுரை மாவட்ட தலைவரிடம் பேசிய ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் விமான நிலையத்தில் ஏதாவது சம்பவம் நடைபெறுகிறதா ? உங்கள் ஏரியாவில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என அண்ணாமலை குரலில் கேள்வி கேட்பது போல் வாய்ஸ் கேட்கிறது. அதற்கு ஆயிரம் பேர் இருப்பார்கள் என இவர் கூறுகிறார். அனைவரையும் வர சொல்லுங்கள் விமான நிலையத்தில் இருந்து திருமங்கலம் வழியாக ராணுவ வீரரின் உடல் செல்ல உள்ளது. அண்ணா இதை வேற மாதிரி பண்ணுவோம், அதற்கு பிறகு இதை எப்படி அரசியலாக மாற்ற வேண்டும் எனவும் யோசித்துக் கொண்டுள்ளேன்.

இதைவெச்சு அரசியல் பண்ணிடலாம் என பேசிய இந்த ஆடியோ தற்போது வெளியாகிய அரசியல் வட்டாரத்தில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆடியோ தனது குரல் இல்லை என மதுரை மாவட்ட தலைவர் சந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது திமுகவில் யாரோ விஷமிகள் செய்தது என அவர் தெரிவித்துள்ளார். ஒரு சிலர் இது அண்ணாமலை குரல் தான். அண்ணாமலை இரண்டு மூன்று இடங்களில் பேசியதை சேர்த்து மேடையில் பேசியது காரில் பேசியது என அனைத்தையும் சேர்த்து எடிட்டிங் செய்து தற்போது இந்த வீடியோவை பதிவேற்றி உள்ளனர்.

அண்ணாமலை என்னிடம் போனில் பேசவில்லை நானும் அவரிடம் ஃபோனில் பேசவில்லை. என்னிடம் சிம் ஒன்றுதான். அதனை சோதனையும் செய்து பார்த்துக் கொள்ளுங்கள் நான் அண்ணாமலையோடு பேசிய ஒரு ரெகார்ட் இருந்தாலும் சொல்லுங்கள் என சவால் விடுத்தார். மேலும் தலைவர் இப்படி மற்ற நிர்வாகிகளுடன் பேச மாட்டார் எனவும் அவர் கூறி இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

Spread the love

Related Posts

அன்பில் மகேஷுக்கு டெங்கு என கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு இருப்பது பன்றி காய்ச்சல் என உறுதியாகியுள்ளது

டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட

மாஸாக வெளிவந்தது தளபதி விஜயின் அடுத்த பட போஸ்டர் | மாஸ் & கிளாஸ் ஆக இருக்கும் விஜய்

தளபதி விஜயின் 66 வது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது

Viral Video | மத்திய பிரதேசத்தில் 2 வயது சிறுவனை பணிப்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது

மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு வயது சிறுவனை பணிப்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள்