கோவை செல்வதாக திட்டமிட்டு இருந்த ஆ ராசாவை உளவுத்துறையின் கட்டளையின் பேரில் முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்துக்களைப் பற்றி அவதூறாக பேசிவிட்டார் என்று பாஜகவினர் பலரும் நீலகிரி பகுதியில் ஆ ராசாவை எதிர்த்து கடையடைப்பு செய்து வருகின்றனர். மேலும் இது பெரிய போராட்டமாகவும் வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே கோவை உட்பட தமிழகம் முழுவதும் நிலவிவரும் பதற்றமான சூழல் பற்றியும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் பற்றியும் உளவுத்துறை முதல்வர் ஸ்டாலினுக்கு அவசர அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆராசாவை அழைத்து நீலகிரியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நீ அங்கு செல்ல வேண்டாம் ரிப்போர்ட் வந்திருக்கிறது என கூறியுள்ளார். அதனால் முதல்வரின் அறிவுரையை கேட்டு ஆ ராசா தன்னுடைய நீலகிரி பயணத்தை கேன்சல் செய்து இருக்கிறார். இந்த தகவலை கோவை நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கும் உடனடியாக தெரிவித்துள்ளார். அவர்களும் இதை தங்களுடைய சமூகவலை பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றனர்.
வாடகைக்கு விடப்படும் ஆண்கள், இளம்பெண்களுக்கென்று பெங்களூரு கன்னடாவில் ப்ரத்யேகமாக தொடங்கப்பட்ட ஆப்

ஏற்கனவே மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பைக் கொண்டு வீசிய சம்பவம் இன்னும் பலருக்கு நினைவிருக்கும். அந்த ஒரு சம்பவத்தை கருத்தில் கொண்டு தான் அத்தகைய சூழலை இனிமேல் உருவாக்க வேண்டாம் என்று ஆ ராசாவை நீலகிரிக்கு அனுப்ப முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
