எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா இவர்களிடம் இல்லாத இந்த ஒரு திறமை அண்ணாமலையிடம் இருக்கிறது | பாராட்டி நெகிழ்ந்த ராதா ரவி

புரட்சித் தலைவர், கலைஞர், அண்ணா, ஜெயலலிதா போன்ற பலரை நான் பார்த்துள்ளேன். ஆனால் அண்ணாமலை போல் பேப்பரை பார்க்காமல் கூட்டங்களில் பேசும் திறமை கொண்ட நபரை நான் பார்த்ததில்லை என உண்ணாவிரதத்தில் பேசியிருக்கிறார் ராதா ரவி

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசே நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பொறுத்த வரை ஏழு இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் காவல்துறையினர் சார்பில் ஒரு இடத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணாமலை ராதாரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த கூட்டத்தில் பேசிய ராதா ரவி அவர்கள் :- “அண்ணாமலையை வளர்த்து விட்டதே திமுக தான் எந்த நேரத்திலும் திமுக ஆட்சி கவிழும் சூழ்நிலை உள்ளது. மேலும் இந்தியாவில் இரண்டு பெரிய அக்யூஸ்ட் இருக்கின்றனர் ஒருவர் அமித்ஷா, மற்றொருவர் மோடி இவர்கள் இருவரும் உங்களை கருவறுத்து விடுவார்கள், அண்ணாமலை பழைய மாதிரி வந்தால் நீங்கள் என்ன ஆவீர்கள் ?

பாஷை தெரியாத கர்நாடகத்திலே பப்பு வீட்டு ஆட்டியவர் அண்ணாமலை. எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா என்று பல பேரை நான் பார்த்துள்ளேன். ஆனால் அண்ணாமலை போல பேச்சுத் திறமை யாருக்கும் இல்லை. கருணாநிதியின் பெயர் போல் பத்திரிகைகளில் தினமும் அண்ணாமலையின் பெயர் வந்து கொண்டே இருக்கிறது. ஏதேனும் அமைச்சர்கள் அவரை வாடா போடா என கூப்பிட்டால் அதை கண்டு கொள்ள வேண்டாம். ஏனென்றால் கடவுள் முருகனையே டேய் முருகா என்றுதான் அழைக்கின்றோம். உங்களை கடவுளாக எண்ணுவதால்தான் சில அமைச்சர்கள் வாடா போடா என்று கூப்பிடுகிறார்கள். உங்களைத் திட்டினால் தான் அமைச்சர் பதவி நிலைக்கும் என்று இவ்வாறாக பேசியுள்ளார் ராதா ரவி.

Spread the love

Related Posts

ஆ.ராசாவை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு காது கேட்கவில்லை என சைகை காட்டியபடி நைசாக நகர்ந்த அமைச்சர் சேகர்பாபு

இந்துக்களைப் பற்றி சர்ச்சையான முறையில் பேசிய ஆ.ராசாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு

4500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

உக்ரைன் க்கும் ரஷ்யாவுக்கு இடையேயான மோதல் பெரும் சலசலப்பை உலக நாடுகளுக்கு மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட

“கொரோன தடுப்பூசியால் என்னுடைய மகள் சுயநினைவின்றி கிடக்கிறாள்…” நெல்லையில் பரபரப்பு

கொரோனா தடுப்பூசி போட்டதால் தனது மகள் சுயநினைவு இல்லாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என தந்தை

Latest News

Big Stories