நேற்று கனல் படத்தின் இசை விழாவில் தமன்னாவை பற்றியும் லெஜென்ட் சரவணா பற்றியும் உருவ கேலி மற்றும் நிறம் தொடர்பான சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டதால் கண்டனங்களை பெற்று வருகிறார் ராதாரவி.
நடிகரும் மட்டும் பாஜக அரசியல் பிரமுகருமான ராதாரவி எப்போது மேடை ஏறி மைக்கை பிடித்தாளுமே ஒரு சர்ச்சை காத்திருக்கிறது என்பதுதான் அர்த்தம். ஏனென்றால் அவர் எப்போது பேசினாலும் ஒரு சர்ச்சையான கருத்துக்களை வெளியிடுவார். அதன் மூலமாகவே அவர் மிகவும் மக்களிடையே பேமஸ் ஆனார். அதேபோன்று கனல் என்னும் படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் அவர் பேசியது என்னவென்றால் :- “யாரும் முகத்தை கண்ணாடியில் ஒரு முறை பார்த்துட்டு நடிக்க வர மாட்டாங்களா ? என்று லெஜெண்ட் சரவணாவை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார். மேலும் பேசியவர் அப்படித்தான் ஒருத்தரை சொன்ன ப்படி இப்ப டான்ஸ் ஆடுகிறார். இப்ப படமும் எடுத்திட்டார். உங்களுக்கு எதெல்லாம் தெரியும் நான் யாரை சொல்றன்னு தெரியுமா ? நான் பேரு சொல்ல விரும்பல.

ஆனா இந்த படம் போதும்னு அவர் சொன்னாரு, மேக்கப் எல்லாம் போட்டுட்டு வந்து நடித்தார். அவ்வளவுதான் அவர் கதை முடிந்தது. இதை அவர் செய்ததால் மறுபடியும் ரோட்டில் கொண்டு வந்து தான் இது விடப்போகிறது. ஏன்னா பார்ப்பவனின் கொடுமைப்படுத்துவது தப்பில்லையா ? இந்த சாபம் உங்களை சும்மா விடாது. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா ? நாலு பேரு வாழ வைக்கிற மாதிரி படத்தை எடுத்து அவனுக்கு யார் நடிக்கவெக்கணும்ன்னு என்று தெரியல பார்த்தியா என பெயரை குறிப்பிடாமல் லெஜெண்ட் சரவணாவை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
மேலும் அவர் தமன்னா பற்றியும் ஒரு சர்ச்சையான கருத்தை கூறியிருக்கிறார் “நான் ஒரு முறை தமன்னாவை ஏர்போர்ட்டில் பார்த்தேன் என்னை பார்த்து வணக்கம் சார் என்றார். நானும் அவரின் உடலை சுற்றி சுற்றி பார்த்தேன் எங்காவது ஒரு பக்கத்திலாவது கருப்பு இருக்கா என்று ஆனால் அவ்வளவும் வெள்ளை தான். இப்படி கலரான பெண்ணாக இந்த நடிகை வந்தார். ஆனால் நடிப்பில் காவியத்தலைவி மாதிரி நடித்துள்ளார்” என்றார். இவர் லெஜென் சரவணா பற்றியும் தமன்னாவை பற்றியும் உருவக கேள்வி மற்றும் நிற வேறுபாடு பற்றி பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
