ராஜா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா, சத்யராஜ், ஜெகபதிபாபு போன்றவர்கள் நடித்து இன்றைக்கு திரைக்கு வந்திருக்கும் படம் தான் ராதேஷ்யம்.
படத்தில் கதாநாயகன் ஒரு மிகப்பெரிய கைரேகை நிபுணர். அவரின் கையில் காதல் ரேகையே கிடையாது என்பதை உணர்கிறார். ஆனால் அவருக்கு ஒரு பெண் மீது ஒரு கட்டத்தில் காதல் ஏற்படுகிறது அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் பலம் என்று சொன்னால் கேமரா ஒர்க் மற்றும் மியூசிக் வொர்க் சொல்லலாம் ஒரு காதல் கதையை உயிரோட்டமாக கடைசி வரை செல்ல கேமரா மற்றும் மியூசிக் மிகவும் தேவைப்படுகிறது. அந்த விஷயத்தை கனகச்சிதமாக பக்காவாக செய்திருக்கிறார்கள். படத்தில் எந்த ஃபிரேம் பார்த்தாலும் பிரம்மாண்டம் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு வேலைப்பாடு.
படத்தின் பலவீனம் என்று சொன்னால் இந்தப் படத்தின் திரைக்கதையை நிச்சயமாக சொல்ல வேண்டும் இந்த படத்தின் கதையை எடுத்துக் கொண்டால் ஒரு வித்தியாசமான கதை மற்றும் சுவாரஸ்யத்தை கூட்ட கூடிய ஒரு கதை. ஆனால் அந்த கதையின் சுவாரஸ்யத்தை கூட்ட இயக்குனர் முன்வரவில்லை. படம் முடியும் வரை மெதுவாகவும், லாகிங் ஆகவும் சென்று பார்க்கும் ரசிகர்களை தூங்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தை முதலில் மூன்று மணி நேரமாக வெளியிடத் தான் படக்குழு முடிவு செய்திருந்தது அதன் பிறகு ஒரு அரைமணி நேரத்தை குறைத்து, 2 மணி நேரம் 30 நிமிடங்களாக வெளியிட முடிவு செய்தது.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

அதற்குப் பிறகு பிரபல இயக்குனர் ராஜமௌலிடம் இந்த படத்தை போட்டுக் காட்டியபோது. அவர் ஒரு சில அறிவுரைகளை கூற இந்த படத்தில் மேலும் 12நிமிடங்களை குறைத்து இரண்டு மணி நேரம் 18 நிமிடங்கள் ஆக வெளியானது இருப்பினும் இந்த படத்தில் பல தேவையற்ற காட்சிகள் இருக்கிறது. அதையும் நீக்கி விட்டால் படம் ஒரு மணி நேரம் கூட தேறாது என்பதால்தான் இரண்டு மணி நேரம் 18 நிமிடத்தை பைனல் பண்ணியிருக்கிறார்கள் படக்குழுவினர்கள். படத்தின் இறுதியில் டைட்டானிக் பட கப்பல் காட்சி போல ஒரு vfx கப்பல் காட்சி வருகிறது. ஆனால் அதில் vfx கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. ஏதோ ஒரு அனிமேஷன் படம் பார்த்தது போல ஒரு ஃபீல் தான் கொடுக்கிறது. பிரபாஸ் மற்றும் பூஜாவின் கதாபாத்திரங்கள் தவிர வேறு எந்த கதாபாத்திரமும் சரியாக வடிவமைக்கப்படவில்லை.
ஒரு நல்ல கதையை பிரம்மாண்டமாக காட்டுகிறேன் என்ற பெயரில் திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார்கள். மொத்தத்தில் மெதுவாக நகரும் காதல்கதைகள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் படத்தை பாருங்கள்.
Kingwoods Rating :- 2/5