பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்றது இந்த ஆடியோ லான்ச்சிற்கு ரசிகர்களின் வரவேற்பு ஏகோபித்தமாக இருந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் எடுத்த ஒரு படம்தான் இது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
டிவி நிகழிச்சியால் கருகலைந்த சோகம் | நடிகை சுஜா வருணியின் கணவர் கொடுத்த அதிர்ச்சி

அந்த நிகழ்ச்சியின் போது மேடையில் சில விஷயங்களை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார். அது என்னவென்றால் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் பக்கங்களை எண்ணிக்கை நான் பார்த்ததுமே அந்த புத்தகம் படிக்கும் எண்ணமே வரவில்லை ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பொன்னியின் செல்வன் கதையில் உள்ள வாந்திய தேவன் கதாபாத்திரத்தை யார் நடித்தால் கச்சிதமாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று வார இதழ் ஒன்றில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு ரஜினிகாந்த் என ஒரே வரியில் பதில் சொல்லி இருந்தார் ஜெயலலிதா.

அதை கேட்டதும் எனக்கு ஒரேய குஷியாக ஆனது. அன்று தான் அந்த கதையை நான் படிக்க ஆரம்பித்தேன். கல்கி இன்று இருந்திருந்தால் அவர் வீடு தேடி போய் காலில் விழுந்து வணங்கி இருப்பேன் என அவர் கூறினார். மேலும் இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று மணி சாரிடம் கேட்டேன். ஆனால் அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை. இதில் நீங்கள் நடிச்சீங்கன்னா உங்க ரசிகர்களுக்கு யார் பதில் சொல்வது நான் அவங்க கிட்ட திட்டு வாங்க வா ? உங்களை இந்த மாதிரி நான் யூஸ் பண்ண விரும்பல என கூறினார். இதே வேறு ஒருவராக இருந்திருந்தால் நான் கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். ஆனால் மணி வேண்டாம் என்று சொன்னார் அதுதான் மணிரத்தினம் என ரஜினி அவருக்கு புகழாரம் சூட்டினார்.