மீண்டும் தாத்தாவான ரஜினி | பையனுக்கு “வணங்காமுடி” என பெயர் சூட்டியிருக்கும் ரஜினியின் மகள் சௌந்தர்யா

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் பெயரை வித்தியாசமாக வைத்துள்ளனர் அவருடைய பெற்றோர்கள். அதுதான் தற்போது ட்ரெண்டிங்காக பேசப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளார். இந்திய சினிமாவில் இவர் பெயர் தெரியாத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர்தான் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்.

சமீபத்தில் இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனாலையே மிகுந்த வருத்தத்தில் இருந்த ரஜினிக்கு தற்போது ஒரு இன்பமூட்டும் செய்தியை இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்துள்ளார். அதாவது சௌந்தர்யாவிற்கு ஒரு ஆண் குழந்தை தற்போது பிறந்துள்ளது. இதை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பகிர்ந்து எங்களுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு “வீர் ரஜினிகாந்த் வணங்கமுடி” என பெயர் சூட்டி இருக்கின்றோம்.

அதாவது சௌந்தர்யாவின் கணவர் விசாகன் அவர்களின் குடும்ப பெயர் தான் இந்த “வணங்காமுடி”. இதனால் சௌந்தர்யா ரஜினிகாந்த் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தற்போது நான்காவது முறையாக இதன் மூலம் ரஜினிகாந்த் தாத்தாவாகியுள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த்க்கு இது இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய திரைப்பட விருதுகளில் பல விருதுகளை தட்டி தூக்கிய தமிழ் பிரபலங்கள் | லிஸ்ட் இதோ

Spread the love

Related Posts

“ஹிந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் பாஜகவையும் நாங்கள் எதிர்ப்போம்”- மன்னார்குடி ஜீயர் பரபரப்பு பேட்டி

இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் பாஜக அரசையும் எதிர்ப்போம் என மன்னார்குடி ஜீயர் பரபரப்பாக

சிறுமிக்கு பாலியல் தொல்லை :- கைதான தமிழ் பட நடிகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் பட நடிகர் ஒருவர் கைதாகி உள்ளார். காமெடி நடிகர்

100 முறை காவேரியில் குளித்த புண்ணியத்தை தரும் தமிழ்நாட்டு அற்புத கோவில்

காவேரி கங்கை போன்ற ஆறுகளில் குளிப்பது புண்ணியம் என்று அனைவரும் அறிவர்…அப்படி அணைத்து மக்களும் தன்