படையப்பா ரஜினி ஸ்டைலில் ஒரு தாத்தா ரோட்டோரமாக நின்று சிகரெட் பிடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இணையத்தில் தினந்தோறும் வித்தியாசமான வீடியோக்கள் எல்லாம் பயனர்களை வந்தடையும். அதில் ஒரு சில வீடியோ பார்க்க ரசிக்கும் படியும் ஒரு சில வீடியோ முகம் சுழிக்கும் படியும் இருக்கும். இது போன்ற வைரல் வீடியோக்களை நாம் சமூக வலைதளங்கள் வாயிலாக காண்கிறோம்.

அந்த வகையில் தான் தற்போது ஒரு தாத்தா படையப்பா ரஜினி ஸ்டைலில் ரோட்டோரத்தில் நின்று சிகரெட் பிடிப்பது போல ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் அந்த தாத்தா பிடியை வாயில் வைத்து பின்பு ஸ்டைலாக அதை பற்ற வைக்கிறார். அதன் பிறகு படையப்பா ரஜினி ஸ்டைலில் கையில் இருந்து வாய்க்கு தூக்கி போட்டு சிகரட்டை பிடிக்கிறார்.
இந்த விஷயங்களை எல்லாம் ஒருவர் அருகில் இருந்து வீடியோ எடுத்துள்ளார். அதை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. காலங்கள் கடந்தாலும் ரஜினியின் ஸ்டைல் மட்டும் என்றுமே ரசிகர்களுக்குள் இருக்கும் என ரஜினி ரசிகர்கள் பூரிப்படைந்து வருகின்றனர்.


https://twitter.com/poornachoudary1/status/1566436233320239105?s=20&t=J3bc08PmNewDhZl7XZ6YCw