உத்தரப்பிரதேச முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கும் ரஜினி? செய்தியாளர் கேள்விக்கு கலகல பதில்!
லக்னோவில் ஏ.என்.ஐ. செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் சிரித்தப்படியே பதிலளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 9ஆம் தேதி இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரம், பத்ரிநாத் கோயில், உத்தரகாண்ட் வியாசர் குகை, துவாரஹட்டில் உள்ள பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று தியானம் செய்தார்.

இமயமலை பயணத்திலிருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார். பின்னர், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை லக்னோவில் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த் சந்தித்தார்
இந்த நிலையில், லக்னோவில் இன்று (ஆகஸ்ட் 19) ரஜினிகாந்திடம் ஏ.என்.ஐ. செய்தியாளர் ஒருசில கேள்விகளை வைத்தார். அதற்கு ரஜினியும் மகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.
அதன்படி லக்னோவில் ரஜினி காரைவிட்டு இறங்கிவிட்டு வருகிறார். அப்போது செய்தியாளர், “சார் ஒரேயொரு சின்ன பேட்டி” என்கிறார். அதற்கு ரஜினி, “என்ன பேட்டி கொடுக்க வேண்டும், கேளுங்கள்” என்கிறார்.
இதையடுத்து செய்தியாளர், “அயோத்தி ராமர் கோயில் போறீங்களா?” என்கிறார். அதற்கு ரஜினி, “ஆமாம். நாளைக்கு அங்கே செல்கிறேன்” என்றவரிடம், ”லக்னோவில் உங்களுடைய ரசிகர்கள் எல்லாரும் உங்களைப் பார்க்க ஆவலாய் உள்ளனர்” எனச் செய்தியாளர் சொல்ல, அதற்கு ரஜினி, “ஆமாம்… ஆமாம்” என்கிறார்
தொடர்ந்து அவரிடம் “உத்தரப் பிரதேச முதல்வரைச் சந்திக்கப் போகிறீர்களா? அவரிடம் என்ன கோரிக்கை வைக்கப் போகிறீர்கள்? உங்களுடைய படத்துக்கு Tax பற்றிப் பேசுவீர்களா?” எனச் செய்தியாளர் கேட்கிறார். அதற்கு ரஜினி, “இல்லை… இல்லை. வெறும் படத்தை மட்டும் பார்க்கச் சொல்லுவேன்” என்கிறார்.
இறுதியாகச் செய்தியாளர், “உங்கள் படத்துக்கு நல்ல விமர்சனம் வந்திருக்கிறது” என்று சொல்ல, அதற்கு ரஜினி, “நன்றி.. நன்றி” எனச் சிரித்தபடியே சொல்லிவிட்டு நகர்கிறார்.
காலில் விழுந்த ரஜினி :

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் வசூல் சாதனை படைத்தது வருகிறது. 400 கோடிக்கும் அதிகமாக வசூல் குவிந்து இருக்கிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க ரஜினி தற்போது இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்று இருக்கிறார். மேலும் தற்போது பல அரசியல்வாதிகளையும் சந்தித்து வருகிறார்.
UP முதலமைச்சர் உடன் சந்திப்பு:
தற்போது உத்தர பிரதேசத்தில் ரஜினி இருக்கும் நிலையில் அந்த மாநில துணை முதல்வர் உடன் ஜெயிலர் படத்தை அவர் பார்த்து இருக்கிறார்.
மேலும் தற்போது UP முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ரஜினி சந்தித்து இருக்கிறார். அவரை பார்த்ததும் ரஜினி அவர் காலில் விழுந்துவிட்டார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் வரும் வில்லனின் காலில் விழாமல் சுயமரியாதை பேசும் நடிகர் ரஜினிகாந்த் தன்னை விட வயது குறைவான யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது ஏன் தெரியுமா? விரிவாக பார்ப்போம். ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக இமய மலையில் தியானம் செய்வதாக கூறி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். இமயமலை குகைக்குள் தியானத்தில் ரஜினிகாந்த் மூழ்கி இருக்க இங்கு ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மறுபக்கம் இமயமலையில் இருக்கும் ரஜினியின் புகைப்படங்களும் வெளியானபடி இருந்தன.

ரஜினிகாந்த் எப்போது வருவார்.. பல ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிப்படத்தை கொடுத்து இருக்கும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், இமயமலை பயணத்தை முடித்துகொண்ட ரஜினி தமிழ்நாடு திரும்பவில்லை. அவர் ஜார்க்கண்ட் நோக்கி சென்றார்.
மறுபக்கம் ரஜினியின் வருகைக்காக காத்திருந்த படக்குழு, அவர் தமிழ்நாடு ராஞ்சிக்கு சென்றதை தொடர்ந்து அவர் இல்லாமலேயே ஜெயிலர் வெற்றிவிழா செய்தியாளர் சந்திப்பையும் நடத்தி முடித்துவிட்டது. அதன் பின்னராவது தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்துக்கு சென்றார் ரஜினிகாந்த். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்கப்போவதாக தெரிவித்தார். ஆனால், அதற்கு யோகி ஆதித்யநாத் விரும்பவில்லை. அவருக்கு பதிலாக உபி துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா ரஜினிகாந்துடன் திரைப்படம் பார்த்தார். ஆனால், அவரும் முழு படத்தையும் பார்க்காமல் பாதியிலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றது ரஜினிக்கு இன்சல்டாக அமைந்தது. இந்த நிலையில் லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் சென்றார் ரஜினிகாந்த். தன்னை வரவேற்க வீட்டு வாசலுக்கு வந்த யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.
இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் வில்லனான வரும் நானா படேகர் அமைச்சராக நடித்து இருப்பார். அவர் தனது காலில் விழுமாறு ரஜினியிடம் சொல்வார். ஆனால், ரஜினிகாந்த் சுயமரியாதை கருதி காலில் விழ மறுப்பார். மாஸாக இருக்கும் அந்த சினிமா காட்சியை, தற்போது யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த காட்சியுடன் பலர் ஒப்பிட்டு வருகிறார்கள். 72 வயதான ரஜினிகாந்த் 52 வயதான, தன்னை விட 21 வயது குறைவான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தற்கான காரணத்தை அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
முதலமைச்சராகவும், அரசியல்வாதியாகவும் யோகி ஆதித்யநாத் அறியப்பட்டாலும், அதற்கு முன்பாக அவரை இந்து மத துறவியாகவே பார்க்கப்பட்டு வந்தார். சிறுவயதிலேயே கோரக்நாத் மடத்தில் ஐக்கியமான அவர், பிற்காலத்தில் பிற்காலத்தில் தலைமை மடாதிபதியாக உயர்ந்தார். எனவே வயது வித்தியாசம் இன்றி அவரது காலில் மக்கள் விழுவார்கள் என்றும், அதன் அடிப்படையிலேயே ரஜினிகாந்த் விழுந்து இருக்கிறார் எனவும் பலர் கருத்திட்டு வருகிறார்கள்.
🫤🫤🫤
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 19, 2023
pic.twitter.com/Tyg7RgfX0B