“நாட்டுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்….” ரஜினி வெளியிட்ட புதிய வீடியோ வைரல்

இந்தியாவில் வருகிற சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

நாடு முழுவதும் வருகிற 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடு, அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடத்தில் தேசியக் கொடியை ஏற்றி உங்களின் தேசப்பற்றை காண்பியுங்கள் எனக் கூறியிருந்தார்.

இதனால் பல பாஜக நிர்வாகிகளும் இந்திய பொதுமக்களும் தங்களுடைய வீட்டின் வெளியே சின்னதாக இருந்தாலும் தேசிய கொடியை ஏற்றி தங்களுடைய நாட்டு பற்றை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் ரஜினி விஜய் போன்றவர்களும் இதை செய்து வருகின்றனர். தற்போது ரஜினி அவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தினம் சார்பாக ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நாட்டு மக்கள் அனைவரும் உங்கள் வீட்டின் முன் இந்திய கொடியை பறக்க விடுங்கள். ஜாதி, மதம், கட்சி என எல்லாவற்றையும் துறந்து ஒரு இந்திய குடிமகனாக இந்த வேலையை செய்யுங்கள். நாடு இல்லை எனில் நாம் இல்லை அதனால் நாம் எல்லோரும் இந்தியர்கள் என ஒன்றுபட்டு இருங்கள் என இவ்வாறாக கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது இது குறித்து அறிக்கையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

கிழிந்த ஜீன்ஸ் போட்டு கொண்டு சிகப்பு நிற மேலாடை மட்டுமே அணிந்து இருக்கும் கவர்ச்சி படங்களை பதிவிட்டிருக்கும் நடிகை பூனம் பஜ்வா

நடிகை பூனம் பஜ்வா கிழிந்த ஜீன்ஸ் போட்டுகொண்டு சிகப்பு நிற உடையில் மேலாடை மட்டுமே அணிந்து

பரோட்டா சாப்பிட்டதால் இறந்து போன லாரி கிளீனர் | காரணம் என்ன

இடுக்கியில் தொண்டையில் பரோட்டா சிக்கிக்கொண்டதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி

🔴BREAKING || பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா..அதிர்ச்சியில் பாஜக?

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்

x