சென்னை ராஜ் பவனில் ஆளுநரை சந்தித்து விட்டு திரும்பியபோது செய்தியாளர்களை சந்தித்து பேசி ரஜினியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் அளித்த பதில்களை பார்க்கலாம்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி பயணத்தை முடித்துவிட்டு இன்று கவர்னர் மாளிகைக்கு சென்று ஆர் என் ரவியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது :- “இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு அவருடன் 25 முதல் 30 நிமிடம் வரை நான் பேசினேன். காஷ்மீரில் பிறந்து வட இந்தியாவிலேயே இருந்தவர் நம்முடைய கவர்னர். அவர் தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார். முக்கியமாக தமிழ் மக்களை அவர் கடின உழைப்பாளர் நேர்மையானவர்கள் என்று கூறி மிகவும் பிடித்துள்ளதாக கூறினார்.

குறிப்பாக தமிழகத்தில் இருக்கின்ற இந்த ஆன்மீக உணர்வு அவருக்கு ரொம்பவே பிடித்துள்ளது. தமிழகத்தில் நல்லதுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன் என கூறினார். மேலும் அவரிடம் நான் அரசியலும் பேசினேன். ஆனால் நான் அரசியலுக்கு வருவது பற்றி விருப்பம் எனக்கு கிடையாது.
மேலும் அவரிடம் ஜிஎஸ்டி வரி பாலுக்கும் தயிருக்கும் உயர்ந்துள்ளது என கேட்கப்பட்ட கேள்விக்கு அதைப்பற்றி நான் பேச முடியாது நோ கமெண்ட்ஸ் என ஒரே பதிலாக தெரிவித்துவிட்டார். மேலும் ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்ட அவரிடம் 15 ஆம் தேதி அல்லது 22ஆம் தேதி படபிடிப்பு துவங்கும் என கூறியிருக்கிறார். மேலும் பார்லிமென்ட் தேர்தல் குறித்து நீங்கள் பேசியபோது விவாதிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் கேட்கும்போது அதைப்பற்றி எல்லாம் நான் உங்ககிட்ட சொல்ல முடியாது நன்றி என சொல்லிவிட்டு சென்றார்.
