ராஜ்கிரனின் மகள் ஜீனத் காமெடி நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தின் காரணமாக ராஜ்கிரன் குடும்பத்தார் அதை எதிர்ப்பு தெரிவித்து வருவது போல தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஆன ராஜ்கிரன் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர். 1989 ஆம் ஆண்டு வெளியான “என்ன பெத்த ராசா” என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பிறகு தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து மாணிக்கம், தலைமுறை, நந்தா, சண்டக்கோழி தற்போது வெளியாகியுள்ள விருமன் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார் ராஜ்கிரன்.
ஜம்முனு ஹனிமூன் பிளான் போட்ட ரவீந்தர் … தேன்நிலவு எங்கே தெரியுமா ?

மூன்று முறை தமிழக தேசிய விருது பெற்ற இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் தமிழ் சினிமாவில் உள்ளது. இந்த நிலையில் இவரின் மகள் ஜீனத் காமெடி நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நாதஸ்வரம் என்ற தொடரின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான முனீஸ் ராஜா தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்தி நடிகர் ஆன சண்முக ராஜனின் தம்பியும் அவர்.
பேஸ்புக்கில் ராஜ்கிரானின் மகள் ஜீனத் பிரியாவுடன் அறிமுகமாகி நண்பராகி பழகியுள்ளார். நாளடைவில் இந்த பழக்கம் திருமணம் வரை சென்று இருக்கிறது. இதனிடையே முனீஸ் ராஜா ஜீனத் பிரியா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டனர். தற்போது முனீஸ் ராஜா குடும்பத்தில் இந்த காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து ராஜ்கிரன் குடும்பத்தினர் இதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
