பாலிவுட்டில் ஒரு சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவர் தற்போது ரன்வீர் நடத்திய நிர்வாண போட்டோ சூட்டுக்கு ஆதரவு அளித்து குரல் கொடுத்துள்ளார். அது தற்போது சர்ச்சையில் முடிந்திருக்கிறது.
ஹிந்தியில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் ரன்வீர் சிங். இவர் தனது பன்முக திறமையால் ரசிகர்களை பெற்றார். இவரின் படங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை கவரும். சிறந்த நடிகராக இவர் இந்தியில் தடம் பதித்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நடிகர் சமீபத்தில் ஒரு நிர்வாண போட்டோ வெளியிட்டு கண்டனங்களை பெற்றார். இவரின் மனைவியான தீபிகா படுகோன் ரசிகர்களும் ரன்வீர் சிங்கின் ரசிகர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் மகளிர் அமைப்பினர் இது மனதை புண்படுத்துகிறது என புகார் தெரிவித்தனர். இதையெல்லாம் தாண்டி அமெரிக்கா மாடல் நடிகை ரன்வீர் சிங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரின் நிர்வாண வீடியோவை போட்டார். ஹிந்தியில் பிரபல பாலிவுட் நடிகைகளான வித்யா பாலன், ஆலியா பட் ஆகியோரும் இவருக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலும் ரன்வீரை ஆதரிக்கும் விதமாக ஒரு நியூடு ஃபோட்டோ சூட்டிங் நடத்தி வெளியிட்டார். அந்த போட்டோ சூட்டுக்கு கேமரா பிடித்தது அவருடைய மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த லிஸ்டில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார். அதாவது பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகையாக வலம் வருபவர் தான் ராக்கி சாவந்த். இவர் தற்போது ரன்வீர் சிங்குக்கு ஆதரவாக :-” ஆடைகள் இல்லாமல் போஸ் கொடுத்து நமது நாட்டு பெண்களுக்கு அவர் நல்லது செய்திருக்கிறார். என் நண்பா ரன்வீர் நீங்கள் இதுபோல தொடர்ந்து நிர்வாணமாக போட்டோஷூட் நடத்த வேண்டும். உங்களை இப்படி பார்க்கத்தான் நான் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
