எனக்கு முத்த காட்சிகள் மட்டும் வேண்டாம் எல்லா காட்சிகளும் வேணும்…. பரபரப்பு கிளப்பிய நடிகை

சினிமாவில் மத்த நடிகைகளுக்கு கொடுப்பது போல எனக்கும் நல்ல நல்ல கதாபாத்திரத்தை கொடுங்கள் எனக்கு முத்தாட்சியை மட்டும் தான் கொடுக்கிறார்கள் என செய்தி சேனல் ஒன்றுக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் நடிகை ராக்கி சாவந்த்.

இந்த நடிகைக்கு பெரும்பாலும் இந்தி படங்களில் குத்து பாடல்கள், கவர்ச்சி காட்சிகள், முத்த காட்சிகள் படுக்கையறை காட்சிகள் என இப்படிப்பட்ட காட்சிகள் தான் கிடைக்கும். அந்த ரோலையும் அவர் கச்சிதமாக செய்து நடித்து விடுவார். தற்போது அதுகுறித்து நடிகை ராக்கி சாவந்த் ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில் “நீங்கள் எங்களை ட்ரோல் செய்ததால் தான் நாங்கள் நட்சத்திரங்கள் ஆனோம். இல்லையென்றால் நாங்கள் சினிமா பிரபலங்களே கிடையாது. நீங்கள் ட்ரோல் செய்வதால் நான் நொந்து போய் விடப் போவதில்லை. உங்களால் என்னை ஒன்றும் செய்யாது.

நான் சினிமாவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். என்னுடைய தாத்தாவும் அப்பாவும் சினிமா பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை. அதனால் நான் உள்ளேன் நுழைய மிகவும் சிரமப்பட்டேன். அதில் சில இனிப்பான விஷயங்களும் கசப்பான விஷயங்களும் இருக்கும். என் அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. புற்றுநோயால் மிகவும் வேதனையில் இருந்தார். எங்களுக்கென யாரும் இல்லை. நான் சினிமாவில் கடினமாக உழைத்தேன். கவர்ச்சி ஆடைகளை அணிந்தேன். பாலிவுட்டில் என்னை நிலைநிறுத்திக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்கிறேன். என்னால்தான் என் சகோதர சகோதரிகளுக்கு திருமணமும் நடந்தது அதை நினைத்து நான் எப்போதுமே பெருமைப்படுவேன்.

பெரும்பாலான நடிகைகள் தங்கள் முதல் படங்களில் அனைத்து உடலும் கவர் ஆகும்படி சல்வார் சூட் அணிந்து தான் நடிப்பார்கள். ஆனால் நான் என்னுடைய முதல் படத்திலேயே கவர்ச்சி பொங்க பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணாய் நடித்திருக்கிறேன். மேலும் என்னை பார்த்தாலே பலரும் முத்த காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் மட்டும்தான் பயன்படுத்துகின்றனர். ஏன் என்னால் மற்ற நடிகைகளை போல மேலே வர முடியாதா ? அவர்களுக்கு கிடைக்கும் நல்ல ரோல்கள் எனக்கு கிடைக்காதா ?அதனால் நல்ல பாத்திரங்களை எனக்கு வழங்குங்கள் நான் நடிக்க தயார்” என அவர் உணர்ச்சிகரமாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

சற்றுமுன் : ரோலெக்ஸ் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச்சினை பரிசாக கொடுத்த கமல் | மேலும் புகைப்படங்கள் உள்ளே

விக்ரம் பட வெற்றியை கொண்டாட கமல் அவர்கள் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சினை பரிசாக தந்திருக்கிறார். லோகேஷ்

சமந்தா மெலிசான மேலாடை அணிந்து தொப்புளை காட்டி வீடியோ வெளியிட்டதால் ரசிகர்கள் குஷி…! வைரல் வீடியோ !

சமந்தா பல படங்களில் நடிக்கும் வரையில் ஒரு ஹீட் கொடுக்காத நடிகையாகத்தான் இருந்தார்கள் கவர்ச்சி காட்டி

ஹிந்தி எதிர்ப்பு விஷயத்தில் இயக்குனர் ரஞ்சித்துக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கிறார இயக்குனர் மோகன் ஜி ?

தற்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாயாகியுள்ள சம்பவம் தான் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள