சிவகார்த்திகேயனின் டான் படத்தை திடீரென விமர்சித்த பாஜக ராமதாஸ்.
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து தற்போது வெளிவந்திருக்கும் படம் தான் டான். இந்த படம் வெளியானதிலிருந்து னால விமர்சனங்களை மக்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் இதுவரை அதிகம் வசூல் செய்த படமாக இருக்கிறது. இந்த படத்தில் கடைசி 30 நிமிடங்கள் அப்பா சென்டிமென்ட் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதனால் இந்த படத்தை நிறைய சினிமா பிரபலங்கள் பாராட்டியும் பேசியுள்ளனர். தற்போது ஒரு அரசியல் பிரபலமும் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசியுள்ளார். அதாவது பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த படம் குறித்து வெளியிட்ட டீவீட்டில் :- நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!” என சொல்லி சிவகார்த்திகேயனையும், இந்த படத்தை இயக்குனர் சிபிஐயும் டேக் செய்து ட்வீட் செய்திருக்கிறார் தற்போது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
