ராமதாஸ் அறையில் ஒட்டுக்கேட்கும் கருவி அன்புமணி நிஜ முகம் வெளிவந்தது தந்தையை மகனே உளவுபார்க்கிறார் இது அசிங்கமான செயல் எங்காவது இப்படி நடக்குமா இதை விசாரித்து காவல்துறை நடவைடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் அளித்துள்ளேன். அன்புமணி நடவடிக்கைகள் சரியில்லை அன்புமணி பெயருக்கு பின்னல் ராமதாஸ் என்றுவரக்கூடாது இனிஷியல் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம்.
அன்புமணி தரப்பு விளக்கம் :
ஒட்டு கேட்பு கருவி விவகாரத்தில்,பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவதாக, பாமக தலைவர் அன்புமணி தரப்பு ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ராமதாஸ் அவர்கள் முதலில் யாரோ ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தினார்கள் என்றார், பின்னர் அந்த கருவியை தனியார் நிறுவனத்திடம் உண்மையை கண்டறிய கொடுத்துள்ளேன் என்கிறார், காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளேன் என்கிறார் பலவேறு தகவல்களில் முரண்பாடு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு :
அப்பா மகன் சண்டை யாருக்கு தலைமை பொறுப்பு யாருக்கு பதவி என ராமதாஸ் குடும்பத்தில் பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தந்தை என்ன செய்கிறார் என்ன திட்டம் போடுகிறார் என அன்புமணி தெரிந்துகொள்ள அதாவது ஒட்டுக்கேட்க ஒட்டுக்கேட்கும் கருவி ராமதாஸ் வீட்டில் பொறுத்தப்பட்டிருப்பது ராமதாஸ் கண்டுபிடுத்துள்ளார் அவர் அமரும் இடத்தில ஒரு ஓரமாக இந்த ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது இதனால் மிகுந்த அதிர்ச்சியடைந்த ராமதாஸ் விழுப்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததுமட்டுமில்லை அந்த கருவியை ஒரு தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளேன் அதை பற்றி விரிவான விளக்கம் கேட்டுள்ளேன் என்றார்.
ராமதாஸ் அறையில் ஒட்டுக்கேட்கும் கருவி : அன்புமணி தான் ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தினர் என்று எப்படி கூறுகிறீர்கள் என்று எழுப்பிய கேள்வி எழுப்பிய kingwoodsnews செய்தியாளர் இதை பற்றி ராமதாஸ் கூறுகையில் நான் பேசுவதை ஒட்டுக்கேட்க அன்புமணி இந்த செயலை செய்திருக்கிறார் இது வருத்தமாக உள்ளது. அன்புமணி அறிவித்துள்ள பொதுக்கூட்டம் பாட்டாளிமக்கள் கட்சி பெயரில் நடக்கிறது அது சட்டத்துக்கு புறம்பானது அது பொதுக்கூட்டம் செல்லாது என்று பேசினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்