இளையராஜா இல்லை என்றால் நான் இங்கு இல்லை என இளையராஜாவை பற்றி பெருமிதமாக பேசி உள்ளார் பா ரஞ்சித்.
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்து பின்பு சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் தான் ரஞ்சித், இவர் இயக்கிய மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை என அவர் படங்களில் பேசப்பட்ட அரசியலும் மற்றும் அவர் படங்களில் நடித்த நடிகர்களும் இவர் மூலம் பிரபலமானவர்கள், ரஜினியை வைத்து படம் எடுத்ததன் மூலம் இவருக்கு ஒரு தனி பெயர் கிடைத்தது. அதிலிருந்து இவருடைய சினிமா கேரியரே வேற லெவலுக்கு சென்றது.
தற்போது இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தின் டிரைலரும் நேற்று வெளியானது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் போன்றவர்கள் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 31 அன்று திரைக்கு வெளிவர இருக்கும் இந்த படத்தில் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது என டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. கட்டாய திருமணம், திருநங்கை, ஓரினச்சேர்க்கை பற்றி அதிகமாக இந்த படத்தில் பேச உள்ளனர் என தெரிகிறது.

இந்த படத்தை பற்றி பேசும்போது இயக்குனர் பா ரஞ்சித்திடம் இசைஞானி இளையராஜாவை பற்றி ஒரு வார்த்தைகள் சொல்லுமாறு கேட்கப்பட்டது அப்போது பேசிய அவர் :- “அவரோடு நான் இணைந்து வேலை செய்ய முடியும் என இன்றுவரை நான் நினைத்ததில்லை, அவரிடம் நெருங்கவே எனக்கு தயக்கம் இருந்தது இளையராஜா இல்லை என்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. அவர் பாடல்கள் எனக்கு சினிமா பாடல்களாக இல்லாமல் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்கள் அமைந்துள்ளது. அவரை நம்பித்தான் நான் இருக்கிறேன்” என பா ரஞ்சித் கூறியுள்ளார். மேலும் ரஞ்சித்தின் சினிமா வாழ்க்கையில் இந்த நட்சத்திரம் நகர்கிறது படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
