ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது மொகாலி ஆடுகளம் என்றாலே ஆஸ்திரேலியா ஒரு மிகப்பெரிய அணியாகவே திகழ்ந்து வருகிறது. 2013 இல் இருந்து இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான போட்டிகள் மொகாலியில் நடக்கும் போது அதில் ஒரு முறை மட்டும் தான் இந்தியா வென்று இருக்கிறது. மீதி ஆட்டங்கள் எல்லாமே ஆஸ்திரேலியா தான் ஜெயித்திருக்கிறது. தற்போது எந்த ஆட்டமும் மொகாலி என்ற உடன் எல்லோரும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று விடும் என்றுதான் எண்ணினார்கள்.

ஆனால் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 209 என்ற அபாரமான இலக்கை ஆஸ்திரேலியாலுக்கு செட் செய்தது. வார்னர், மார்ஷ், ஸ்டோயினிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லை என்பதால் இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி தொடுவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள் என பலரும் எண்ணினார்கள். ஆனால் கிரீன், ஸ்மித், வேட் போன்றோர்களின் அபாரமான ஆட்டத்தால் இந்த போட்டியை கச்சிதமாக வென்று முடித்தது ஆஸ்திரேலியா. சேஸ் செய்யும்போது எந்த இடத்திலும் தடுமாறாமல் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஆட்டத்தை தன்னுடைய பக்கமே வைத்திருந்தது ஆஸ்திரேலியா.

கடைசியில் 4 பந்துகளை மிச்சம் வைத்து அந்த ஆட்டத்தை முடித்தது. தற்போது இந்தியாவின் இந்த மோசமான தோல்வி குறித்து விமர்சித்து பேசி உள்ளார் இந்தியாவின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. “கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி அனுபவம் மற்றும் இளமையும் கலந்த ஒரு வலுவான அணியாகவே திகழ்ந்து வருகிறது. ஆனால் இப்போது இளமை மிஸ் ஆகிறது. கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் இந்திய அணியின் பீல்டிங்கில் மிகச் சிறப்பாக இருந்தது. மற்ற எந்த அணியும் இந்தியாவுக்கு அருகில் வர முடியாத அளவிற்கு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் ஜடேஜா தான். இன்று ஜடேஜா இல்லை. பீல்ட்ங்கின் எக்ஸ்பேட்டர் எங்கே ?” என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார் சாஸ்திரி மேலும் “இந்த மோசமான பீலிங் தான் இந்தியா தோல்விக்கு காரணம்” என்றார்.