ஈரோடு : கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் 94,985 ரூபாய் என குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி

கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் 94 ஆயிரத்து 985 ரூபாய் என குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்குத்திபுறம் தோட்டீ கிராமத்தை சேர்ந்தவர் தான் ரேவண்ணா. இவர் மனைவி காலி மற்றும் தனது குழந்தைகளுடன் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் தான் வசித்து வருகிறார். சமீப காலமாக வீட்டில் இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் வரை மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்தி வந்த ரேவண்ணாவிற்கு தற்போது மின் கட்டணம் 94 ஆயிரத்து 985 ரூபாய் செலுத்துமாறு குறுஞ்செய்தி மூலம் வந்துள்ளது.

“கோலிய ஒப்பனிங் அனுப்பிட்டு நான் வெளிய போணுமா ?” | நிருபரின் கேள்விக்கு கோவமாக பதிலளித்த கே எல் ராகுல்

100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் இதுவரை ரேவண்ணா மின்கட்டணம் செலுத்தியது இல்லை. தற்போது இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியை அடைந்த ரேவண்ணா உடனடியாக தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார். இது குறித்து சத்தியமங்கலம் கோட்டா மின்செயர் பொறியாளர் குலசேகர பாண்டியன் விசாரணை மேற்கொண்டு இந்த புகார் குறித்து மின்னிணைப்பு மீட்டரை ஆய்வு செய்தனர். அதில் மின்வாரிய அதிகாரிகள் மின்சாரம் மீட்டர் கணக்கெடுப்பில் கூடுதலாக பதிவாவதாகவும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை எடுத்து தற்போது ரேவண்ணா நிம்மதி அடைந்துள்ளார்.

Spread the love

Related Posts

என்னை எதிர்க்க விஜய் மற்றும் ரஜினியை பயன்படுத்துகிறார்கள் – ஈரோடு மாநாட்டில் சீமான்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் மாநாடு முடித்துவிட்டு திரும்பிய பொது பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான் அவர்கள் “எங்களுக்கு

குளியல் முடித்து விட்டு பேன்ட் இல்லாமல் அமர்ந்து போட்டோஷூட் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா புகைப்படங்கள் வைரல்

சமீப காலமாக பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு லைக்களை

Video Viral | மாட்டிற்கு “கோ பூஜை” செய்த இங்கிலாந்து நாட்டின் பிரதமர் வேட்பாளர்

இங்கிலாந்தில் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனக் பசு மாட்டிற்கு பூஜை செய்யும் வீடியோ காட்சி