“உங்களை தான் மலை போல நம்பியிருக்கிறோம் ரோஹித், எங்களை கை விட்டுடாதீங்க” ரோஹித்திடம் கெஞ்சும் கோஹ்லியின் பெங்களூரு அணி

ரோகித் சர்மாவை நம்பி தான் நாங்கள் இருக்கிறோம் என பகிரங்கமாக ஆட்டத்தின் இறுதியில் பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டுப்லஸ்ஸிஸ்.

இந்த ஆண்டு ஐபிஎல் தற்போதுதான் ஒரு பரபரப்பு கட்டத்தை எட்டி இருக்கிறது. ஏனென்றால் இரண்டு அணிகள் அரைஇறுதிக்கு தகுதி ஆகிவிட்டது. மீதம் இருக்கும் இரண்டு அணிகள் எது என்பதற்கான போட்டி இன்றளவும் நிலவி வருகிறது. இன்னும் இரண்டு தினங்களில் அது யார் என்று உறுதி ஆகி விடும். ஆர்சிபி அணி நேற்று டேபிள் டாப்பில் இருக்கும் குஜராத் அணியை எளிதில் வென்றது. அந்த வெற்றியின் மூலம் தற்போது நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அந்த ஆட்டத்தில் இதற்கு முன்பு பார்மில் இல்லாத விராட்கோலி தகுந்த நேரத்திற்கு ஃபார்முக்கு திரும்பியது அந்த அணியின் ரசிகர்களுக்கும், விராட் கோலி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடித்திருக்குமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் தற்போது நான்காவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி இதே இடத்தை தொடருமா என்பது தெரியாது. ஏனென்றால் நாளை நடக்கவிருக்கும் ஆட்டத்தில் மும்பை அணியை டெல்லி அணி வென்று விட்டாலே போதும் டெல்லி அணி அரையிறுதிக்கு தகுதி ஆகிவிடும். பெங்களூரு அணி வெளியேற்றப்படும்.

அதனால் இது நடக்கக் கூடாது என்பதற்காக பெங்களூரு அணியின் ரசிகர்களும், பெங்களூரு அணியின் கேப்டனுமான டுப்லஸ்ஸிஸ் நாங்கள் மும்பையின் வெற்றிக்காக காத்திருக்கிறோம். ரோகித்சர்மா நன்றாக விளையாடி அந்த வெற்றியை பெறுவார் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என மறைமுகமாக மும்பை அணியின் வெற்றிக்கு நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால் அவர்கள் வென்றால் தான் பெங்களூரு அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். அதனால் மும்பை அணி எப்படியாவது வென்றுவிட வேண்டும் என ரசிகர்களும் பெங்களூர் அணியினரும் வேண்டி வருகின்றனர்.

ஆனால் ரோகித் சர்மா இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீதமிருக்கும் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு நாங்கள் களம் இறக்குவோம் என பொறுப்பில்லாமல் பேசியுள்ளார். இதனால் பெங்களூர் ரசிகர்கள் சற்று பீதியில் தான் இருக்கின்றனர். இருந்தாலும் டெல்லி அணி அவ்வளவு சீக்கிரத்தில் மும்பை அணியிடம் தோற்று விடாது என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஏனென்றால் டெல்லி அணி கடந்த மூன்று ஆட்டங்களில் ஒரு வலுமிக்க பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. அதனால் அவர்களை மும்பை வெல்வது கடினம் எனவும் கூறி வருகின்றனர். எனவே அந்த ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நாளை நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியை பெங்களூர் ரசிகர்கள் உற்று கவனிப்பார்கள் என்பது மறுக்க முடியாத கருத்து.

என்னதான் பெங்களூரு அணி மும்பையை விட அதிகமாக வென்று இருந்தாலும், கடைசியில் மும்பை அணியின் வெற்றியை தான் நாடி இருக்க வேண்டி இருக்கிறது என பலரும் பெங்களூரு அணியை கலாய்த்து வருகின்றனர்.

Spread the love

Related Posts

“உங்களை தான் மலை போல நம்பியிருக்கிறோம் ரோஹித், எங்களை கை விட்டுடாதீங்க” ரோஹித்திடம் கெஞ்சும் கோஹ்லியின் பெங்களூரு அணி

ரோகித் சர்மாவை நம்பி தான் நாங்கள் இருக்கிறோம் என பகிரங்கமாக ஆட்டத்தின் இறுதியில் பேசிய பெங்களூரு

உத்திரபிரதேச சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ புகையிலை போடும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்திரபிரதேச சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் புகையிலை போடும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகளிலிருந்து

x