இந்தியா முழுவதும் கோலாகலமாக தொடங்கி கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி கொண்டிருக்கும் தொடர்தான் ஐபிஎல் டி20 தொடர். இந்த தொடரில் தற்போது அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் அணிகளான சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் அவர்களின் முதல் ஆட்டத்தில் முறையே கொல்கத்தா, டெல்லி, மற்றும் பஞ்சாப்பிடம் தோற்றனர். இதனால் இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக அதில் தோற்ற அணிகள் அடுத்த ஆட்டத்தில் முனைப்புடன் விளையாடி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கும். அப்படி பெங்களூரு அணி இன்றைக்கு சந்திக்க காத்திருக்கும் அணி தான் கொல்கத்தா அணி. இந்த கொல்கத்தா அணி ஏற்கனவே முதல் ஆட்டத்தில் சென்னை அணியை தோற்கடித்து தான் இப்போது இரண்டாவது ஆட்டத்தை பெங்களூரு அணியிடம் ஆட போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ஆட்டத்தில் பஞ்சாபிடம் 200 ரன்கள் அடித்து தோல்வியை கண்டதால் பஞ்சாப் அணியிடம் பண்ண தவறை திருத்தி, தற்போது கொல்கத்தா அணியிடம் எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்ற முனைப்புடன் இன்று களம் இறங்குவார்கள், அதேபோல கொல்கத்தா அணியும் சென்னை அணியிடம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது ஆட்டமும் அந்த வெற்றியை தொடர வேண்டும் என்ற அதீத முனைப்புடன் செயல் படுவார்கள். அதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. கடந்த காலங்களில் பெங்களூரு அணியை சந்திக்கும் போது கொல்கத்தா அணியின் கையே எப்போதும் ஓங்கி இருந்திருக்கிறது. அந்த அளவிற்கு பெங்களூரு அணியிடம் கேகேஆர் அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவர். அதேபோல் இன்றைய ஆட்டமும் கேகேஆர் அணி அதே பலத்துடன் பெங்களூரு அணியை எதிர்கொள்ளுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Dream 11 Prediction
D.Karthick or sam billings, Faf (c), S.Iyer, N.Rana, S.Narine (vc), Russell, Hasaranga, V.Iyer, Umesh, Siraj, Varun
குறிப்பு :- இந்த அணி டாஸ்க்கு பிறகு மாறலாம், அதனால் அதையும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.