பாக்கெட் மனி மட்டும் ஒரு நாளைக்கு 40 லட்சம் | உண்மையான டாடி’ஸ் லிட்டில் பிரின்சஸ் பற்றி கேள்விபட்டுறீர்களா ?

நியூயார்க்கை சேர்ந்த ஒரு பெண்மணி தன்னுடைய ஒரு நாள் செலவிற்கு 40 லட்சம் செலவு செய்கிறார் என்ற செய்தியை கேட்டு இணையதள வாசிகள் அதிர்ந்து போய் உள்ளனர்.

நம் மீம்களிலும் அடுத்தவர்களை கலாய்ப்பதற்கும் டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் என ஒரு வார்த்தையை பயன்படுத்துவோம். ஆனால் அந்த வார்த்தையை உண்மையாக்கி அமெரிக்காவில் ஒரு பெண்மணி உண்மையிலேயே டாடி லிட்டில் பிரின்சஸ் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

நியூயார்க்கை சேர்ந்த ரோமா என்பவர் ஒரு டிக் டாக் பிரபலம். இவருடைய டிக் டாக்கில் இதுவரை 79 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். இவர் தன்னை எப்போதும் “ஸ்டே அட் ஹோம் டாட்டர்” என அடையாளப்படுத்து வருகிறார். மேலும் அவருடைய சமீபத்திய இன்ஸ்டால் பதிவும் பலரை ஆச்சரியத்திற்கு உள்ளது. இவருடைய ஒரு நாள் பாக்கெட் மணி 50 ஆயிரம் டாலர்களாகும். அதாவது நம்முடைய இந்திய மதிப்பு படி ரூபாய் 40 லட்சங்கள்.

இதைக் கேட்கவே ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. உண்மையாகவே அமெரிக்காவில் ஒரு பெண்மணி டாடி லிட்டில் பிரின்சஸ் வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறார். இவர் எப்போதும் காலையில் எழுவதும், பின்பு ஜிம்முக்கு போவதும், அதன் பின்னர் தோழிகளுடன் ஷாப்பிங்கிற்கு செல்வதும் தான். இவருடைய தினசரி வேலை.

அந்த வேலைக்கு இவருக்கு 50,000 டாலர்கள் வீட்டில் கொடுக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது இவரது ஒரு இன்ஸ்டால் பதிவில் தனது கண் புருவங்களை அழகு படுத்துவதற்காகவே 600 டாலர்களை செலவு செய்திருக்கிறார். இந்திய மதிப்பு படி 47 ஆயிரத்து 370 ரூபாய் ஆகும். இப்படியான லிட்டில் பிரின்சஸ் வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவரை பார்த்து தற்போது பலரும் பொறாமை பட்டு கொண்டிருக்கின்றனர்.

Spread the love

Related Posts

வரி ஒழுங்கா கட்டுங்க இளையராஜா… மத்திய அரசு 3 ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது | இத்தனை கோடி வரி பாக்கியா ?

சென்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய புலனாய்வு துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த மாதம்

“சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி” – இஸ்ரோ தலைவர் சோம்நாத் | எதற்காக அவ்வாறு கூறினார் ?

சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி எனக் கூறி தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இஸ்ரோ

“இந்துக்களை அவமதிக்கும் நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள்” – மதுரை ஆதினம் பரபரப்பு பேச்சு

மதுரை பழங்காநத்ததில் நடைபெறும் விசுவ இந்து பரிஷத் துறவியர் மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசினார் அப்போது