“Me-Too லாம் பொய், ஆண்கள் அட்ஜஸ்ட்மன்ட்க்கு கூப்டா பெண்கள் காசு வாங்கிட்டு என்ஜாய் தான பண்றீங்க…” நாயகி ரேகா நாயர் சர்ச்சை பேச்சு

ஆண்கள் பணம் கொடுத்தால் சில பெண்களும் அதை ஜாலியா என்ஜாய் பண்ணுவாங்க. ஆனால் இதுவரை என்னை யாரும் அப்படி கூப்பிடவில்லை என ரேகா நாயர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

சமீபத்தில் சோசியல் மீடியாக்களில் அதிகம் பேசப்படும் ஒரு பெண்ணாக இருப்பவர் தான் ரேகா நாயர். பார்த்திபன் இயக்கிய சிங்கிள் சார்ட் படமான இரவின் நிழல் படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் இவர் நிர்வாணமாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பேமஸ் ஆனார். மேலும் இவர் நடித்த அந்த காட்சியும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பாராட்டுகளை பெற்றாலும் ஒரு புறம் கடுமையான விமர்சனங்களையும் பெற்றது. அது குறித்து பேசிய அவர் கலையை கலையாக தான் பார்க்க வேண்டும். நான் நடித்துள்ள அந்த காட்சி மிகவும் நெருக்கமான ஒரு காட்சி, தாயின் மார்பில் ஒரு குழந்தை பால் குடிப்பது போன்று ஒரு காட்சி.

“இளையராஜா இல்லை என்றால் நான் இங்கு இல்லை” – பா ரஞ்சித் பெருமிதம்

அதில் நிர்வாணத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். அது மிகவும் தவறு, அந்த ஒரு காட்சிக்கு எனக்கு எந்த அளவு பாராட்டு கிடைத்ததோ அதே அளவிற்கு விமர்சனங்களும் கிடைத்தது. பலர் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா என கடுமையான விமர்சனங்களை என் மீது வைத்தனர் என ரேகா நாயர் கூறியுள்ளார். இந்தநிலையில் தற்போது இவர் ஷகிலா உடன் ஒரு பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசி உள்ளார். அதில் என்னை தயாரிப்பாளர், இயக்குனர் என பலரும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்போம் என கூறுகின்றனர் இந்த விஷயங்களை எல்லாம் தற்போது பல நடிகைகள் சொல்ல நாம் கேட்டிருப்போம், இது தொடர்பாக அந்த விவாதத்தில் பேசிய போது தன்னை யாரும் இதுவரை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைக்கவில்லை என ரேகா நாயர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் :- “மீடு என நாம் சொல்வதெல்லாம் பொய், ஒருவர் கூப்பிட்டால் விருப்பப்பட்டால் நாம் போகலாம் இல்லையென்றால் வர முடியாது என மறுத்து விடலாம். நாம் ஒன்றும் விரல் சுப்பும் குழந்தைகள் அல்ல. ஒருவர் எதற்காக பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும் எந்த நோக்கத்திற்காக பேசுகிறார் என்பதையும் புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் நமக்கு இருக்கிறது. எனவே ஒரு படத்தை நடித்துவிட்டு பத்து வருடம் கழித்து அந்த இயக்குனர் என் மீது கை வைத்தார் இந்த இயக்குனர் கை வைத்தார் என்றெல்லாம் பேசுவது ஒப்புக்கொள்ள முடியாதது.

அப்படி உண்மையிலேயே அவர் உங்கள் மீது கை வைத்திருந்தால் பத்து வருடமாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ? அப்போதெல்லாம் அதை என்ஜாய் செய்து விட்டு இப்போது குறை கூறினால் என்ன அர்த்தம் ?ஆண்கள் பணம் கொடுக்கிறார்கள் என புகார் கூறுகிறீர்களே பெண்களும் என்ஜாய் தானே பண்ணுறீங்க ? இதுவரைக்கும் எந்த டைரக்டரும் என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு வா என கூப்பிடல… அதனால எனக்கு தெரிந்து ஒரு இயக்குனரோ அல்லது ஒரு நடிகையோ காதல் வயப்பட்டு அதில் உடல் உறவு கொள்கிறார்கள் என்றால் அது நியாயமானது. அதைத் தாண்டி படுக்க வந்தால் தான் படம் நடிக்க முடியும் என யாரும் சொல்ல முடியாது அப்படி யாராவது சொன்னால் அவர்களை நம் பெண்கள் செருப்பை கழட்டி அடிப்பார்கள் எனவே இதுபோன்று புகார்கள் எல்லாம் சந்தேகிக்க தோன்றுகிறது” என அவர் கருத்தை கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

“தமிழகத்தின் முதல்வராக டாக்டர் கலைஞர் தான இருக்கிறார் ?” கன்பியூஸ் ஆகி உளறிய அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழகத்தின் முதல்வராக டாக்டர் கலைஞர் தான இருக்கிறார் என பேசி தற்போதுநெட்டிசன்களிடம் வாங்கி கொட்டிக்கொண்டு வருகிறார்

“நெல்சனை ட்ரோல் பன்னாதீங்க…” ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த இயக்குனர் லோகேஷ்

இயக்குனர் நெல்சனை ட்ரோல் செய்யாதீர்கள் என்று டைரக்டர் லோகேஷ் ரசிகர்களுக்கு பணிவான வேண்டுகோள் விடுத்துள்ளார். நெல்சன்

சேலம் எட்டு வழி சாலை பற்றி எங்கள் ஆட்சியில் எதிர்த்து விட்டு தற்போது அதற்க்கு ஆதரிக்கின்றனர் திமுக | கிழித்து தொங்கவிட்ட EPS

சேலம் மாநகராட்சியில் தையல் மையத்தை திறந்த எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி