பிக்பாஸில் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமான ஆர்.ஜே வைஷ்ணவி ஒரு மர்ம நபர் என்னை பின் தொடர்ந்து வருகிறார் என வீடியோ ஆதாரங்களுடன் சமூகவலைதளத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் நடை பயிற்சியை மேற்கொண்டிருக்கும் போது இளைஞர் ஒருவர் தன்னை பின்தொடர்வதாக ஒரு வீடியோ ஒன்றினை சமூகவலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார். முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் மற்றும் ரேடியோ தொடர்பாளருமான வைஷ்ணவி அதில் கூறியது :- அந்த இளைஞர் நீண்ட நேரம் நான் செல்லும் இடத்திற்கெல்லாம் என்னை பின் தொடர்ந்து வருகிறார். இதை எடுத்து தனது வீடு அந்த மர்ம நபருக்கு தெரியக்கூடாது என்பதற்காக அரை மணி நேரமாக அங்கேயே நான் நின்றேன் மேலும் என்னுடன் வளர்ப்பு நாய் ஒன்று உள்ளது அதை நான் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மிரட்டும் விதமாக பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து போன் பேசுவது போல் அந்த மர்ம நபரை வீடியோ எடுத்து அதை பதிவு செய்துள்ளதாக ஆர்ஜே வைஷ்ணவி கூறியுள்ளார். இந்த புகாரை சென்னை காவல்துறை டுவிட்டர் பக்கத்திலும் டேக் செய்து வெளியிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக காவல்துறை தரப்பில் சமூக வலைத்தளம் மூலம் பாராட்டும் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள. மேலும் அந்த குறித்து விசாரணை நடத்தவும் இதுபோன்ற நிலைகளில் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவலன் உதவி என்ற செயலியை பாதுகாப்புக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை காவல்துறை சமூக வலைதளம் பதிலளித்துள்ளது.
Was followed and stalked by a creepy dude today very close to where I live. I was walking my dog and this guy on a bike kept following around pretending to be on a phone call while very obviously staring at me @chennaipolice_ pic.twitter.com/eWNQ5eF2is
— Valia (@Vaishnavioffl) June 13, 2022
