சென்னையில் உண்மையாக ட்ரெயினில் நடந்த அமானுஷ்ய சம்பவம் | நேரில் கண்டவரின் வாக்குமூலம்

உலகம்தோன்றி இன்றுவரை மனிதன் தேடிக்கொண்டிருக்கும் முக்கியமான புதிர்களில் ஒன்று பேய். அகால மரணமடைந்தவரின் ஆன்மா, பில்லி சூனியம் ஏவல் சார்ந்த விஷயம், ஏலியன்களின் செயல், இல்லை என்பதை மனிதர்கள் போன்று உலகில் தோன்றி கண்களுக்கு மறைவாக அமானுஷ்யமாக தெரியும் உயிரினங்கள் என்று பலவிதமான நம்பிக்கைகள் இவ்வுலகில் இருக்க பெரும்பாலோனோர் நம்புவது.

நிறைவேறாத ஆசைகளுடன் அகால மரணம் அடைந்தால் பேயாக மாறுகிறது என்றும். பேய்கள் கதவைத் தட்டுகிறது நான் நேரில் பார்த்தேன். பேய் இரவில் எங்கள் வீட்டின் மீது மண்ணை வாரி இறைக்கிறது. பேய் எங்களுக்கு நெருக்கமானவர்களின் குரலில் தனியாக இருக்கும் போது எங்களை கூப்பிடுகிறது என்று பல பேரின் பலவிதமான வாக்குமூலங்களை நாம் கேட்டிருப்போம். ஆனால் இதில் இருந்து வித்தியாசப்பட்டு ஓடும் ரயிலில் இரவு நேரத்தில் அமானுஷ்ய நிகழ்வை பற்றி ஒருவர் வாக்குமூலமாக கூறியுள்ளார். அதைப் பற்றித்தான் இப்போது நாம் காண இருக்கிறோம்.

அவரின் பெயர் எழிலரசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 24. மென்பொருள் ஆய்வாளராக ஹைதராபாதில் வேலை பார்க்கிறார். இவர் சென்னையில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு செல்கையில் இரவு நேர ரயில் பயணத்தின்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவருடைய தாயார் கூறுகையில் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு நேரப் பயணங்களில் அமானுஷ்யங்கள் நிகழ்வதாக கூறியுள்ளனர். அவருடைய தாயார் மஞ்சுளாவும்வும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எக்மோர் ரயில் நிலையத்தில் 7 மணிக்கு புறப்பட தயாராக இருக்கும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ஏசி கம்பார்ட்மெண்டில் திருச்சிக்கு செல்வதற்காக இருக்கிறார்கள்.

அது இருவர் மட்டுமே பயணிக்கும் அறைகள் கொண்ட குளிர்சாதனப்பெட்டி அதாவது ஏசி கம்பார்ட்மெண்ட். அந்த கம்பார்ட்மெண்ட் முழுவதும் ஒரு சிலர் மட்டுமே தென்பட்டதால் அங்குள்ள ஒரு வட இந்தியரிடம் எழிலரசியின் தாயார் மஞ்சுளா டிக்கெட் எடுக்கவே இவ்வளவு கடினமாக இருந்த கம்பார்ட்மெண்டி இப்போது காலியாக உள்ளது என்று அவர் கேட்க, இந்த ரயில் ஒருவிதமான அமானுஷ்ய பாதையை கடந்து செல்லும் எனவும் இதை நிறைய மக்கள் அறிந்து இருந்தமையால் இந்த ரயிலில் இரவு நேர பயணத்தை அவர்கள் தடுத்து இருக்கலாம் என்றும் கூறினார் அவர்.

இவர் கிண்டல் செய்யும் நோக்கில் கூறினார் என்று கருதி தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று போர்வை போர்த்திக் கொண்டு உறங்க தயாரானார்கள் இருவரும். நேரம் 12 மணி இருக்கும் திடீரென்று எழிலரசியின் தாயார் மஞ்சுளாவிற்கு அவர்கள் அறையில் உள்ள ஜன்னல் கண்ணாடியை யாரோ கீறுவது போல சத்தம் கேட்கிறது. அந்த ரயில் வண்டியின் சத்தத்தை விட இது மிகவும் அதிகமாக கேட்டது. அவர் அது என்னவென்று அந்த ஜன்னலின் கண்ணாடியை நிமிர்ந்து பார்த்தாள். அதில் எந்த ஒரு கீறலும் இல்லை உடனே அவர் கண்களை இறுக்க மூடிக்கொண்டு அனுமன் சாலிசா மந்திரத்தை மனத்துள்ளே ஓதிக் கொண்டிருந்தார்.

கான்ஜுரிங் திகில் படம் உருவாக காரணமாக இருந்த பேய் பண்ணை வீட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா ? அங்கு வசித்தவர்கள் கூறிய வாக்குமூலம்

நேரம் 12 மணி 15 நிமிடங்கள் இருக்கும் தாயார் ஊழியர் ஒருவர் அவர்கள் கம்பார்ட்மெண்டில் கேட்டை நோக்கி ஓடுவதை கண்டு தனது படுக்கையில் இருந்து சற்று வெளியே வந்து அந்த ஊழியர் என்ன செய்கிறார் என்று பார்த்தால். அவர் அந்த கம்பார்ட்மெண்டில் கதவுகளை அடைத்துவிட்டு பின் மறு கம்பார்ட்மெண்டிற்கு ஓடி மறைந்து விட்டார். நேரம் 12 மணி 30 நிமிடங்கள் இருக்கும் அவருடைய தாயார் மஞ்சுளாவிற்கு ஒரு பெண்மணியின் அழுகுரல் கேட்கிறது. திடீரென்று அதே பெண் “வேண்டாம் என்னை ரயிலில் இருந்து கீழே தள்ளாதீர்கள்” “வேண்டாம் என்னை ரயிலில் இருந்து கீழே தள்ளாதீர்கள்” என்று கதறுகிறார்.

அந்த வட இந்தியர் எழுந்து அவர்கள் இருவரிடமும் வந்து அந்த குரலை கேட்டீர்களா என்றார். அவர்களும் பயந்து கொண்டே ஆமாம் என்று சொன்னவுடன் அவர்கள் அனைவரும் கழிவறை அருகே சென்று பார்க்கிறார்கள். அங்கு எதுவுமே இல்லை .ரயில் சப்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை. திடீரென்று வெளிப்புறமாக இருந்து அந்த கதவை ஏதோ ஒன்று வந்து மோதுகிறது. மறுபடியும் அதே பெண்ணின் அழுகுரல் இந்த முறை அவள் “நான் செத்து கொண்டு இருக்கிறேன், தயவு செய்து என்னை உள்ளே அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கதறுகிறாள். இந்த கதறல் இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து நின்றுவிட்டது. அதன் பின் மறுபடியும் அந்த முழு இடமும் அமைதி நிலையை அடைந்தவுடன் அவருடைய தாயார் மற்றும் அந்த வட இந்தியர் மூவரும் அந்த ரயில் நிலைய பாதுகாவலரிடம் சென்று அந்த நிகழ்வைப் பற்றி கேட்டனர்.

அந்த பாதுகாப்பாளர் அவர்களிடம் அந்த நேரத்தில் அவர்களை கடந்த ஒரு ரயில் நிலையம் அமானுஷ்யமான ஒன்று எனவும் சில வருடங்களுக்கு முன் அந்த ரயில் நிலையத்தில் ஒரு இளம்பெண் அவர்கள் பயணித்த அதே கம்பார்ட்மெண்டில் இருந்து ஒரு சில மர்ம ஆசாமிகளால் தூக்கி எறியப்பட்டார் எனவும் அப்போதிலிருந்து ஒரு சில சமயங்களில் யாரெல்லாம் அந்த கம்பார்ட்மெண்டில் பயணம் செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த அமானுஷ்யம் நிகழும் என்றும் கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

“கடுப்பில் டிவி ரிமோட்டை உடைத்தேன் வாட்டர் பாட்டில்களை தூக்கி எறிந்தேன்” | நடுவர் தீர்ப்புக்கு டெல்லி அணி பயிற்சியாளர் பாண்டிங் ஆவேசம்

கோபத்தில் ரிமோட் களையும் வாட்டர் பாட்டுகளையும் தூக்கி வீசி உடைத்து விட்டேன் எனக்கூறி பாண்டிங் தற்போது

“நீங்க சமந்தா கூட இனிமே நடிப்பீர்களா …. ?” வில்லங்கமான கேள்விக்கு என்ன பதில் சொன்னார் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா ?

நாக சைதன்யாவிடம் நீங்கள் சமந்தாவுடன் படம் நடித்த நேரிட்டால் நடிப்பீர்களா என கேட்டதற்கு தற்போது அவர்

“குடும்ப கட்சிகள் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல நம் நாட்டு இளைஞர்களுக்கு ஆபத்தானவை…” தெலுங்கானாவில் காரசாரமாக பேசிய பிரதமர்

பிரதமர் மோடி தற்போது தெலுங்கானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி

x