தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் ஓட்டுனரை அரிவாளால் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்பகோணத்திலிருந்து தாராசுரம் அருகில் உள்ள எலுமிச்சங்காய் பாளையம் என்ற இடத்திற்கு மினி பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து நடத்துனராக விக்னேஷ் என்பவரும் ஓட்டுனராக வசந்த் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். அந்த நேரத்தில் பேருந்தில் ஏறிய நபர் ஒருவர் தாராசுரதிற்கு முன்னதாக இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த இடத்தில் பேருந்து நிற்காது என்று ஓட்டுநரும் நடத்துநரும் தெரிவித்து உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினை அவதூறு வார்த்தைகளில் பேசியதால் கன்னியாகுமரியில் பாஜக பிரமுகர் கைது


அதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் பேருந்தின் ஸ்டியரிங்கை திருப்பி அடாவடியில் ஈடுபட்டதுடன் சாவியையும் பிடிங்கியுள்ளான். பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி விட்டு சாவியை பிடுங்கிய நபரை விரட்டிச் சென்று பிடித்துள்ளார். பின்னர் அவர் தனது நண்பருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்ததன் பெயரில் எலுமிச்சங்காய் பாளையத்திலிருந்து அந்த நபர் மீண்டும் ஏறி ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரை வெட்டி உள்ளன். இதனால் ஓட்டுனருக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பஸ் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Hooliganism in TN ! pic.twitter.com/eAHmOPxtVC
— karthik gopinath (@karthikgnath) April 8, 2022