கேரள மாநிலத்தில் ரவுடி ஒருவன் போலீசாரை தாக்க இரண்டு அடி நீளமுள்ள பட்டா கத்தியை கொண்டு வந்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் எஸ் ஐ யாக இருப்பவர்தான் அருண்குமார். இவருக்கு 37 வயதாகிறது இவர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள ரவுடி சுகதன் என்பவரை பார்த்துள்ளார். அப்போது அவனுடைய வண்டியை மடக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக போலீஸ் வண்டியை முன்னால் நிறுத்தினார். அப்போது தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் வைத்திருந்த இரண்டு அடி நீளமுள்ள பட்டா கத்தியை உடனே உருவி அருண்குமாரை தாக்க முயன்றார்.

அப்போது அந்த தாக்குதலுக்கு கொஞ்சம்கூட அஞ்சாமல் அந்த போலீஸ்காரர் உடனே அவன் கையை மடக்கி பிடித்து அவனை நிலைகுலையச் செய்து அவனிடம் இருந்த கத்தியை பிடுங்கி வேறொரு காவலாளியிடம் கொடுத்து. அந்த ரவுடியை லாவகமாக பிடித்து ஜீப்பில் ஏற்றினார். அந்த சம்பவத்தின் போது கையில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. ஆனால் பெரிய காயம் ஏதும் இல்லாமல் ரவுடியை லாவகமாக பிடித்து அவர் உயிர் தப்பினார். இந்த விஷயத்தை கண்டு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இவ்வளவு துணிச்சலுடன் சிங்கம்போல் களமிறங்கி அந்த ரவுடியை பிடித்ததற்காக இவருக்கு விருதுகளை தரவேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் இந்த வீடியோவும் சமூகவலைதளத்தில் படு வைரலாக சுற்றி வருகிறது.
kudos to the brave police officer.
— Vijayakumar IPS (@vijaypnpa_ips) June 17, 2022
In the service of the Society/ Nation.
#Police #Courage #Kerala pic.twitter.com/kIiE1uAVex
