தனுஷின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஸ்டுடியோஸ் யூடியூப் சேனலில் இருந்து எல்லா வீடியோக்களும் தற்போது நீக்கப் பட்டு சேனல் காணாமல் போயிருக்கிறது.
வுண்டர்பார் ஸ்டுடியோஸ் தனுஷ் அவர்களின் சொந்த கம்பெனி ஆகும். இந்த கம்பெனி மூலம் பல படங்களை இவர் தயாரித்திருக்கிறார். கடைசியாக வெளிவந்த படம் மாரி 2 . இந்த மாரி 2 படத்திற்கு பிறகு எந்தப் படமும் அவர் தயாரிக்கவில்லை. கடைசியாக வெளியான இந்தப் படமும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் இந்த படத்தின் பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்து 1 பில்லியன் வியூஸ்களை கடந்து சென்றிருக்கிறது.

அந்தப் பாடலின் பெயர் தான் ரவுடிபேபி. வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்ட வேண்டும் என்றாலும் இந்த பாடலை காண்பித்து தான் இப்போது வரை அம்மாக்கள் ஊட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்த பாடல் தற்போது யூடூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த யூட்யூப் வலைத்தளத்தில் உண்டர் பார் ஸ்டுடியோஸ் யூடியூப் சேனலையும் நீக்கப்பட்டுள்ளது.
இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை டுவிட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். மீண்டும் தனுஷ் அவர்களின் யூடியூப் சேனலை வரவழையுங்கள் என யூடியூப் வலைத்தளத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் சீக்கிரமே ஹேக்கர்களால் முடக்கப்பட்ட இந்த யூட்யூப் சேனல் மீண்டும் சரி செய்து வர வைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
