எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆலியா பட் போன்றோர்கள் நடித்து நேற்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் RRR இந்த படம் தற்போது உலகம் முழுவதும் 250 கோடி ஒரே நாளில் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வந்திருக்கிறது.

பாகுபலி நான் ஈ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய தெலுங்கு சினிமாவின் வெற்றி இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் தயாரான பிரம்மாண்ட படைப்பு தான் இந்த திரைப்படம்.
இந்த படம் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் வெளியாக வேண்டியது ஆனால் சில காரணங்களாலும் கோவிட் லாக்டோன் களாலும் இந்த படம் வெளியாவது தாமதமாகிறது. தற்போது இந்த படத்தை மார்ச் 25 கண்டிப்பாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்தது. அதன்படி நேற்று வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய சாதனையை படைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் ஆந்திரா தெலுங்கானாவில் 120 கோடியும், இந்தியில் 25 கோடியும், கர்நாடகாவில் 14 கோடியும், கேரளாவில் 4 கோடியும், தமிழகத்தில் 12 கோடியும், மற்ற வெளிநாடுகளில் மொத்தமாக 75 கோடி வசூலித்துள்ளது, மொத்தம் சராசரியாக 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது..