பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் யாகம் நடத்திய சர்ச்சையால் தற்போது பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூரில் பல செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் யாகங்கள் நடத்துவார்கள். கடந்த இரண்டாம் தேதி அதிகாலை வள்ளி குகை செல்லும் நடைபாதையை மறித்து சத்துரு சம்கார லட்ச்சார்ச்சனை ஓமம் நடத்தினார் சபரீஷ்வரன். இதனால் பக்தர்கள் வள்ளிக்குகைக்கு செல்லும் வழிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவில் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதை எடுத்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் பூமி பூஜை நிகழ்ச்சியில் இந்து அர்ச்சகரை கொண்டு பூஜை செய்வதற்காக அதிகாரிகள் மீது கோபம் கொண்டு திட்டினார். திராவிட மாடல் என்றாலே அனைத்து மதமும் சமம் என்றும் பூமி பூஜை நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரையும் அழைத்து பூஜை நடத்த வேண்டும் என அதிகாரி மீது கோபம் கொண்டார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பரிகார பூஜைக்காக இந்து அர்ச்சகர்களை கொண்டு தனியாக யாகம் நடத்தியது கடும் கேள்விக்குள்ளாகிறது. அனைவரும் சமம் என்று சொல்லக்கூடிய நிலையில் ஏன் குறிப்பிட்டு இந்து அச்சகர்களை மட்டும் கூப்பிட்டு வந்து தனியாக யாகம் நடத்த வேண்டும் என்று பக்தர்களுக்குள்ளே கடும் அதிர்ச்சியை இது ஏற்படுத்தி உள்ளது.
இவர் உள்ளே சென்றதால் வள்ளி குகைக்குள் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டதால் இதனை கண்டித்து பாஜக நிர்வாகிகள் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராகவும் சபரீசனை கண்டித்தும் போராட்டம் நடத்தினர். மேலும் போராட்டம் நடத்திய 320 பேர் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். தற்போது இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
