இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதில் தவறு ஏதும் இல்லை என்று எஸ் ஏ சந்திரசேகர் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளர்.
இசையமைப்பாளர் இளையராஜா கொஞ்ச நாட்களுக்கு முன்பு அம்பேத்கரும் மோடியும் நிகரானவர்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்தை வெளியிட வந்த திரு இளையராஜா அவர்கள் அம்பேத்கர் இந்த காலத்தில் இருந்திருந்தால் மோடியின் திட்டங்களை கண்டு மகிழ்ந்திருப்பார் என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அவரது மகன் யுவன்சங்கர் ராஜா உட்பட இதற்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார். இதனைப் பற்றி இப்போது பேசிய திரு சந்திரசேகர் அவர்கள் “இன்னும் பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை நரேந்திர மோடியிடம் உள்ளது, எனவே அம்பேத்கரையும் மோடியையும் இளையராஜா ஒப்பிட்டு பேசுவதில் எந்த தவறும் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து” என்றார் எஸ் ஏ சந்திரசேகர். இதற்க்கு அவரை தற்போது இணையதளத்தில் வசை பாடி வருகின்றனர்.