“காண்டம்ன்ன என்ன ? அத எதுனால பயன்படுத்தனும்ன்ணு இங்க யாருக்கும் தெரில…” – சாய்பல்லவி ஓபன் டாக்

நடிகை சாய் பல்லவி ஒரு சமீபத்திய நேர்காணலில் ஆணுறை பற்றியும் பெண்கள் உடுத்தும் உடை பற்றியும் பேசி உள்ளார் இப்போது சமூக வலைதளங்களில் அது வேகமாக பரவி வருகிறது.

சாய் பல்லவி கடந்த ஒரு சில தினங்களாகவே சமூக கருத்துகளை அதிகம் வெளியிடுகிறார். அதனால் அவருக்கு சில சிக்கலும் ஏற்படுகிறது. இருப்பினும் அவரது சமூக கருத்துக்களை அவர் வெளியிடுவதில் தயங்கவே இல்லை. அது போன்று தான் தற்போது ஒரு நேர்காணலில் ஆணுறை பற்றியும் பெண்கள் உடுத்தும் உடையை பற்றியும் பேசி உள்ளார். அதில் பேசிய அவர் :- “செக்ஸ் எஜுகேஷன் ரொம்ப அவசியம் எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். எல்லருக்கும் அத பத்தின விழிப்புணர்வு வேணும்.

கையை விரித்த நெட்பிலிஸ் | சரியான நேரத்தில் திருமண விடியோவை ஒளிபரப்பாததால் கடுப்பான நயன்தாரா | 25 கோடி நஷ்டமா ?

இது ஒரு பேஷன் இல்ல இது சுகாதாரம் தான். எப்படி கொரோனா வர்றதுக்கு முன்னாடி நம்ம தடுப்பூசி போட்டுகிறோமோ அதே மாதிரி தான் இந்த காண்டம். இது நம்மை பல பிரச்சினைகளில் இருந்து காக்கா உதவியா இருக்கு. ஒருவேளை மெடிக்கல் ஷாப்பில் சென்று இதை கேட்பதற்கு கூச்சப்பட்டு கொண்டு நம்மில் பலர் இதை விளக்குகின்றனர் என நினைக்கிறேன். ரொம்ப அவசியமான ஒரு விஷயம் அதுல தப்பா பார்க்க ஒண்ணுமே இல்ல” என கூறியுள்ளார்.

மேலும் உடையை பற்றி பேசிய அவர் :- “எனக்கு சின்ன வயசுல ஒரு பிரச்சனை வந்துச்சு 16 வயசுல எங்க அப்பா அம்மாவோட அனுமதியோட நான் காஸ்டியூம் கொடுத்து டான்ஸ் ஆடினேன். அந்த வீடியோவை பாஸ் பண்ணி என் உடம்புல இருக்குற சில இடத்தை ரொம்ப தப்பா பாக்குறாங்க. அது எனக்கு தெரிஞ்ச உடனே ரொம்ப ஷாக்கிங்ஆஹ் இருந்துச்சு மேலும் அது என்ன ரொம்ப தொந்தரவு செஞ்சது. அதனால நான் இந்த வழியை பயன்படுத்துற, எப்போதுமே நான் புடவையை தான் இனிமே கட்டுவேன். அது மனதளவில் எனக்கு ஒரு நிம்மதியை தருது. அவங்க எப்படி சொல்றாங்க, இவங்க எப்படி பார்ப்பாங்கன்னு எனக்கு ஒரு பயம் இல்லாமல் இருக்கும்.

மேலும் நான் என் வீட்டில் கோபப்படுவேன், கத்துவேன் என்கிட்ட நிறைய கெட்ட பழக்கம் இருக்கு ஆனா நான் இந்த மாதிரி டிரஸ் பண்ற அப்படிங்கறதுனால மட்டும் நான் நல்லவ கிடையாது. நம்ம போடுற டிரஸ்ஸுக்கும் நம்மளோட கேரக்டருக்கும் சம்பந்தமில்லை. நாளைக்கு எனக்கு ஒரு பொண்ணு இருந்தா கூட அவ சின்ன டிரஸ் எல்லாம் போடுறான்னா அவளை நான் அவன் போக்கில் விட்டுடுவேன். அவ சின்ன டிரஸ் போடுறதுனால இந்த உலகம் அவள தப்பா பார்க்காத ன்னு அவ நினைக்கிறா அவ நினைப்பு படியே நான் விட்டுவிடுவேன். நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன். அவ நம்பிக்கையை உடைக்க மாட்டேன்” என்று பளிச்சென்று பதில் கூறியுள்ளார் சாய்பல்லவி. இந்த வீடியோ கருத்து வந்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Spread the love

Related Posts

Watch Video | கர்பமாக இருக்கும் போது குத்தாட்டம் போட்ட சகுனி பட நடிகை ப்ரணிதா | ரசிகர்கள் அதிர்ச்சி

சகுனி பட நாயகி ப்ரணிதா வயிற்றில் பிள்ளையுடன் இருக்கும் போது போடும் குத்தாட்ட வீடியோ இணையதளத்தில்

படத்தில் “ஆமை” என வசனம் வைத்து அஜித் ரசிகர்களை மறைமுகமாக பீஸ்ட் படத்தில் கலாய்த்த விஜய் | அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பு

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் டிலிப்குமார் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்திருக்கும் படம்தான் பீஸ்ட். இந்த

கள்ளக்குறிச்சி வன்முறை விவகாரத்தில் ஆதிதிராவிடர்கள் சம்மந்தப்பட்டுள்ளனர் என செய்தி வெளியாக கொதித்தெழுந்திருக்கிறார் திருமா

கள்ளக்குறிச்சி மாணவி இறந்தது தொடர்பான வன்முறை விவகாரத்தில் ஆதிதிராவிடர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்கள் என ஆங்கில நாளேடு ஒன்று

x