மதத்தின் பெயரால் யாருடைய உயிரும் போகக் கூடாது என்ற கருத்தை முன்னிறுத்தி சாய்பல்லவி அவர்கள் பேசியிருப்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பிரிண்ட் ஆகி வருகிறது.
மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு முதல் படத்திலேயே பெற்றவர் சாய்பல்லவி. இதைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் போன்ற பல மொழிகளில் இவர் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் தற்போது கார்த்தி மற்றும் மாவீரன் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் கார்த்தி படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி வருகிறார். அதேபோல மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் அவர் வருகிறார். தற்போது புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சாய்பல்லவி அவர்கள் ஒரு கருத்தை அதில் தெரிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் போட்டியாளரான ஆர்.ஜே வைஷ்ணவியை பின்தொடர்ந்த மர்ம நபர் | பரபரப்பு விடியோவை வெளியிட்ட வைஷ்ணவி

அந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரிதாகப் பேசப்படுகிறது. அவர் கூறியது என்னவென்றால் காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், இங்கு மாடுகளைக் கொண்டு சென்று இஸ்லாமியரை வழிமறித்து ஜெய்ஸ்ரீராம் என சொல்ல சொல்லி தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றதும் இரண்டுமே ஒன்றுதான், என பேசி இது வன்முறையான செயல் எனக் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் மதத்தின் பெயரால் எந்த ஒரு மனித உயிர் போகக் கூடாது என்கிற கருத்தை முன்னிறுத்தி செம போல்டான ஒரு பேச்சினை அவர் நேற்று வெளிப்படுத்தியுள்ளார். இது சினிமா வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரிதாகப் பேசப்படுகிறது.
