நடிகை சாக்ஷி அகர்வால் பட வாய்ப்பு கிடைக்காததால் அடுத்ததாக ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.
ஆர்யா நயன்தாரா போன்றோர்கள் நடிப்பில், அட்லி இயக்கத்தில் வெளியான வெற்றிப்படம் தான் ராஜா ராணி. இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் முதன்முறையாக நடிகையாக அறிமுகமானார். அதற்க்கு பிறகு ரஜினியின் காலா, அஜித்தின் விசுவாசம் போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து சற்று பிரபலனமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய முகத்தினை அனைவரும் அறியும் படி செய்தார். அதன்பிறகு இவருக்கேனே தனி ரசிகர்கள் பட்டாளம் அமைந்தது.

பிக் பாஸ் முடித்து வந்த கையோடு பல படங்களிலும் இவர் நடிக்க தேர்வானார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் தற்போது வெளியாகமல் முடங்கிக் கிடப்பதால், தற்போது படவாய்ப்புக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை கிலாமர் விடீயோக்கள் வெளியிட்டும் வந்தார். அதன் பின்பும் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தற்போது அந்த முயற்சி தோல்வி அடைந்திருக்கிறது.


அதன்படி அவர் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். அதாவது தற்போது சீரியலில் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளார். கண்ணான கண்ணே சீரியலில் ஒரு கெஸ்ட் ரோல் நடித்து வருகிறார். ஏற்கனவே அந்தச் சிரியலில் இனியா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது சாக்ஷிக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் நடிக்க வேண்டும் என்று முடிவேடுத்திருக்கிறார்.அவர் நடித்த எபிசோட் இன்று வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
