சமந்தாவின் உடல்நலம் மிகவும் மோசமாக உள்ளதா ? | விளக்கமளித்த சமந்தா தரப்பு

நடிகை சமந்தா உடல் நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி தீயாய் பரவியது. அதனால் சமந்தாவின் செய்தி தொடர்பாளர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஒரு நடிகையாக வலம் வந்தவர்தான் சமந்தா. இவர் நாகச்சைதன்யாவுடன் திருமணம் முடித்து தனது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வந்தார். அதன் பின்பு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனித்தனியே பிரிந்தனர். இந்த நிலையில் சமந்தாவுக்கு மையோ சிட்டிஸ் என்ற அரிய வகை தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வந்தன. மேலும் டப்பிங் பேசும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் அளித்தார் சமந்தா.

தற்போது இந்த பிரச்சனை காரணமாக பட வாய்ப்புகளை இவர் இழந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது நேற்று முந்தினும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி தீயாய் பரவியது. இது குறித்து சமந்தாவின் செய்தி தொடர்பாளர் விளக்கம் கொடுக்கையில் சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை இதில் எவ்வித உண்மையும் கிடையாது தற்போது அவர் ஹைதராபாத்தில் தங்களுடைய வீட்டில் சந்தோஷமாக உடல் நலத்துடன் இருக்கிறார். சமந்தாவின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர். இதைக் கேட்டு ரசிகர்களும் நிம்மதியாக உள்ளனர்.

Spread the love

Related Posts

“இஸ்லாமியர்களை தீவீரவாதிகளாக சித்தரிக்காதீர்கள்…. ” பீஸ்ட் படத்திற்கு தடை கோரி தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை

நடிகர் விஜய் நடித்த ஏப்ரல் 13ம் தேதி வெளிவரவுள்ள பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கக் கோரி

சீதாராமம் படத்துல வர்ற நம்ம சீதாவா இது ? | இப்படி இருக்காங்களே

சீதாராமம் படத்தில் நடித்த மிருனால் தாகூர் அவர்களின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகம்

சி.ஸ்.கே ரசிகர்களுக்கு ஏமாற்றம் | இந்த வீரருக்கு இப்படி ஆயிடுச்சே | அப்செட்டில் ரசிகர்கள்

இந்தியா ஸ்ரீலங்கா-வுடன் டி-20 போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது அதில் முதல் டி-20 இல் இந்தியா

x