ஒரு ஆம்பள தப்பு பண்ணா அதுக்கு பொம்பள தான் காரணமா ? | ட்விட்டரில் நாகசைதன்யா ரசிகரை வெளுத்து வாங்கிய சமந்தா

நடிகை சமந்தா தன் மேல் வைக்கப்பட்ட சர்ச்சையை போக்கி ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார் அது தற்போது மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடிகை சமந்தா மற்றும் நடிகை நாகசைதன்யா இருவரும் தற்போது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் இவர்களின் பிரிவு ஏற்பட்டது. இந்த செய்தியை அறிந்ததும் தென்னிந்திய திரை உலக சினிமா வட்டாரமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. தன்னுடைய திருமண வாழ்க்கையை மறந்து விட்டு முழுவதுமாக சினிமாவில் கவனம் செலுத்தும் சமந்தா நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க அவரின் முன்னாள் கணவரான நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருகிறார் எனவும் இருவரும் அடிக்கடி வெளியே சுற்றி வருகிறார் எனவும் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதைப் பற்றிய வதந்தி வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை சமந்தா இந்த விவகாரம் பற்றி பயங்கர கோபத்தில் இருக்கிறார். நடிகர் நாக சைதன்யாவை பற்றி இப்படியெல்லாம் வதந்திகள் வெளியாக சமந்தாவின் பி ஆர் டீம் தான் காரணம் என நாக சைதன்யாவின் ரசிகர்கள் கிளப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சமந்தா பொங்கி எழுந்து ட்விட்டரில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். அவர் கூறியது என்னவென்றால் ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு பரப்பினால் அது உண்மையாகும் ஆனால் ஒரு ஆணைப் பற்றி அவதூறு வந்தால் அது ஒரு பெண் பரப்பியது …. ? ஏன் இப்படியே இருக்கிறீர்கள் கொஞ்சமாவது வளருங்கள் இதைப் பற்றி யோசிக்காமல் உங்களின் வேலையைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் யோசித்து செயல்படுங்கள் என கூறியிருக்கிறார். தற்போது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. மேலும் சமந்தாவின் ரசிகர்களும் சமந்தாவுக்கு ஆதரவாக இதில் செயல்பட்டு வருகின்றனர்.

Spread the love

Related Posts

முதல்வர் ஸ்டாலினின் அன்னையார் தயாளு அம்மாளுக்கு உடல்நலகுறைவு | மருத்துவமனையில் அனுமதி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும் மற்றும் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய தாயாருமான தயாளு

Viral Video | ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மனைவியை பணி செய்யவிடாமல் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் திமுக பிரமுகரான கணவர்

விரலி மலையில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மனைவிக்கு பதிலாக முக்கிய கோப்புகளில் கணவர் கையெழுத்திடும்

“பெரியார் தமிழ் தேசியத்தின் தலைவர் இல்லை, அவரை நாங்கள் ஒரு போதும் தலைவராக ஏற்கமுடியாது” மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்

தந்தை பெரியார் தமிழ் தேசிய தலைவரும் அல்ல, எங்கள் எதிரியும் அல்ல அவர் எங்கள் வழிகாட்டி

x