“கூட்டணியாக இருப்பதால் பொறுமையாக இருக்கிறோம், மோடிக்கு முட்டு கொடுத்தா திமுக தூக்கி எறியப்படும்….” – VCK இளைஞரணி தலைவர் சங்கத்தமிழன்

கூட்டணியில் இருப்பதால் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு இருக்கிறோம் மோடிக்கு முட்டுக் கொடுக்கும் வேலையை செய்யாதீர்கள் என ஸ்டாலினுக்கு அறிவுரை கூறுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சங்கத்தமிழன்.

சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியட் துவக்க விழா நிகழ்ச்சி வளாகத்தில் பிரதமர் மோடி உடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் நெருக்கம் காட்டினார். பிரதமர் மோடியை பெருந்தன்மையாளர் என ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். இது பாஜக திமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி அடையச் செய்தது. பிரதமர் மோடியுடன் ஸ்டாலின் மிகுந்த நெருக்கம் காட்டுவதால் எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா என கேள்வியும் தற்போது எழுந்து வருகிறது. இது கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

“நீங்க சமந்தா கூட இனிமே நடிப்பீர்களா …. ?” வில்லங்கமான கேள்விக்கு என்ன பதில் சொன்னார் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா ?

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதலமைச்சரின் இந்த நடவடிக்கையை கண்டித்து இது தொடர்பாக அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சங்கத்தமிழன் கொடுத்துள்ள பேட்டியில் :- “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் மோடியுடன் நெருக்கம் காட்டுகிறார். அவர் ஒரு நாட்டின் பிரதமர் என்பதால் நாங்கள் அவரை மரியாதையாக கூட்டி வந்து விழா நடத்தினோம் என விளக்கம் கொடுத்துள்ளார். எனவே திமுக இருந்தாலும் சரி விடுதலை சிறுத்தைகளாக இருந்தாலும் சரி சனாதனத்தை எதிர்ப்புகள் உறுதியாக இருக்க வேண்டும்.

தற்போது இங்கே நடப்பது சர்வதேச அளவிலான போட்டி எனவே இந்த போட்டியில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவருக்கு மாநில அரசின் மரியாதை கொடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே அந்த அடிப்படையில் தான் ஸ்டாலின் மரியாதை கொடுத்திருப்பார் என விடுதலை சிறுத்தைகள் நம்புகிறது. ஆனால் இந்த அழைப்பு கூட்டணிக்காக ஒருபோதும் இருக்காது. ஒருவேளை மோடிக்கு முட்டுக் கொடுக்க மோடிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என எண்ணினால் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திலிருந்து தூக்கி எறியப்படும் என்பது ஸ்டாலின் அவர்களுக்கு நன்கு தெரியும்.

அதனால் தான் அன்று நடந்த நிகழ்வு குறித்து அவர் அறிக்கை கொடுத்திருக்கிறார். இன்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு கூட்டணி பலம் தான் ஒரே காரணம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அதிமுக வலிமையான கட்சி தான் ஆனால் பாஜகவுடன் இணைந்த ஒரே காரணத்தில் தான் அது இரண்டாக உடைந்து தற்போது கேட்பார் என்று கிடக்கிறது. நாளைக்கு இதே போல தான் திமுக பாஜகவை மோடியையும் தூக்கிப் பிடித்தால் என்ன நடக்கும் என்பது ஸ்டாலின் நன்றாக அறிவார். அவர் கலைஞர் கருணாநிதியின் வாரிசாக மட்டுமல்ல திமுகவின் வாரிசாகவும் உள்ளார். அதனால் அவர் அப்படி செய்ய மாட்டார் என நாங்கள் நம்புகிறோம்” என இப்படி அவர் கூறி இருக்கிறார்

Spread the love

Related Posts

Video Viral | முதுகில் விஜயின் டாட்டூவை போட்ட ரசிகை | அந்த ரசிகையை கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்திய விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரசிகை ஒருவர் அவரின் முகத்தை தனது முதுகில் டேட்டோ போட்டுள்ளதை கண்டு

நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு நாளில் அவரது ரசிகர்கள் அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

நடிகை சில்க் ஸ்மிதாவின் 27 வது நினைவு நாளை ஒட்டி அவரது ரசிகர்கள் அவருடைய உருவப்படத்திற்கு

பிரதமர் மோடிக்கு உணவுக்காக செலவிடப்படும் தொகை என்ன ? | அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியா பிரதமர் மோடியின் உணவு செலவுகளுக்காக அரசின் பணத்தில் ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்திக் கொள்ளவில்லை