“மீண்டும் காமெடியனாக நடிக்க தயார்” – நடிகர் சந்தானம்

தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு நண்பனாகவும் காமெடி குண சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை மலை போல் வைத்துக்கொண்ட நடிகர் தான் சந்தானம். எப்போது அவர் நான் நாயகனாக படத்தில் வருகிறேன் என்று முடிவெடுத்தாரோ அப்போதிலிருந்து அவருக்கான ரசிகர் பட்டாளம் குறுகியது. ஏனென்றால் ரசிகர்கள் இவரை காமெடியனாக பார்க்க தான் விரும்புகிறார்களே தவிர ஒருபோதும் இவரை கதாநாயகனாக அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதையும் தவிர்த்து ஒன்னு ரெண்டு நல்ல படங்கள் வந்தாலும் ஒட்டுமொத்தமாக இவரை கதாநாயகனாக பார்ப்பதற்கு இன்னும் நம் தமிழ் சினிமா ஏற்றுக்கொள்ளவில்லை.

Video Viral | மாட்டிற்கு “கோ பூஜை” செய்த இங்கிலாந்து நாட்டின் பிரதமர் வேட்பாளர்

அதனாலேயே என்னமோ தற்போது மீண்டும் காமெடியானாகவே நடிக்க தயார் என மேடையில் கூறியிருக்கிறார். ஆர்யா நடித்த விரைவில் திரையரங்கில் வழியாக காத்திருக்கும் படம் தான் கேப்டன். இந்த படத்தில் ஏலியன், பிரிடேட்டர் போன்ற அரிய வகை உயிரினங்களை வைத்து கதை பின்னப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய சந்தானம் அவர்கள் “ஆர்யா எனக்கு நண்பன் அவன் கூறினால் நான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவனுக்கு நண்பனாக நடிப்பேன்” எனக் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. “என்ன சந்தானம் கதாநாயகன் ரோலில் நடித்து சரியாக வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் காமெடியனாகவே வருகிறேன் என பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டாரா ?” எனவும் கூறி வருகின்றனர்.

அவருடைய நடிப்பில் சென்ற மாதம் வெளியான குளு குளு படமும் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பணத்தை அல்ல முடியவில்லை. அதனால்யே என்னமோ இவர் தனது பழைய டிராகில் இறங்குவார் போன்று தெரிகிறது என ரசிகர்கள் ஒருபுறம் கூறி வருகின்றனர். சந்தானம் மீண்டும் காமெடியனாக ரி என்ட்ரி கொடுத்தால் இன்று பல காமெடி நடிகர்களுக்கு வேலை இருக்காது என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் யோகி பாபுவுக்கு எவ்வளவோ கதாநாயகன் சான்ஸ் கிடைத்தும் அவர் தொடர்ந்து காமெடியனாகவே செய்து வருகிறார். சந்தானத்தின் நிலமை இவருக்கு வந்து விடக்கூடாது என்பதில் அவரும் குறிக்கோளாக இருக்கிறார்.

Spread the love

Related Posts

Watch Video | பேரறிவாளனின் விடுதலையால் உறவினர்கள் ஆனந்த கண்ணீர் நெகிழ்ச்சி வீடியோ

பேரறிவாளனின் வழக்கு தற்போது நீதிபதிகளின் அமர்வுக்கு வந்தது இந்த வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது :- “பேரறிவாளன்

டி ராஜேந்தர் தற்போதைய நிலை என்ன ? | எதனால் அவருக்கு தீடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது ? | விளக்கமளித்த மருத்துவர்

இயக்குனர் நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான பன்முகத் திறமை கொண்ட நடிகர் டி ராஜேந்தர் திடீரென

பாமகவினர் அராஜகம் | சூர்யா வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு

சூர்யா நடிப்பில் நாளை வெளிவர இருக்கிற எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் திரையிட கூடாது என

Latest News

Big Stories

x